Tuesday 20 February 2018

ஹேமந்தகுமார் பாசு

தலைவர் ஹேமந்தகுமார் பாசு அவர்களின் நினைவுதினம் 20/02/2018 இன்று. 1954-ல் தேவர் அவர்கள் ஃபார்வர்டுபிளாக் இயக்கத்தின் அகில இந்திய துணைத் தலைவராக இருந்த போது ஹேமந்தகுமார் பாசு அவர்கள் அகில இந்திய தலைவராக இருந்தார். இவர் தலைவராக இருந்த சமயத்தில் அறிவுசார்ந்த இளைஞர்கள் பலரும் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார்கள்.இயக்கத்தில் சாதாரண தொண்டருக்கும் முழு சுதந்திரம் கொடுத்து செயல்பட வைத்தவர்.எம்எல்ஏ,எம்பி என எந்தவொரு அதிகாரமிக்க பதவிகளில் இல்லை என்றாலும் மக்களை ஒன்று திரட்டி அதிகார வர்க்கத்தை அச்சுறுத்த கூடிய அளவிற்கு மக்கள் சக்தியை,மக்களாட்சி தத்துவத்தை  அறிந்த தலைவராக இருந்தார்.சாலையோர வியாபாரிகளின் பாதுகாவலராக இருந்தவர்.கல்கத்தாவில் இன்றைக்கும் சாலையோர வியாபாரிகள் வாழ்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் இவர் தான்.இடதுசாரிய சிந்தனனகளை கொண்ட இயக்கங்களை எல்லாம் ஒன்றிணைத்து இடதுசாரிய முன்னணி(LEFT FRONT) அணி உருவாக காரணமாக இருந்தவர்.1971-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு(CPM) கட்சியின் அலுவலகத்தில் கூட்டணி சம்பந்தமாக பேசிவிட்டு வெளியில் வந்த போது சாலையை கடந்து செல்லும் வழியில் குத்தி கொல்லப்பட்டார்.இவரது பெயரில் ஹேமந்தகுமார் பாசு பவன் உள்ளது. தலைவர் ஹேமந்தகுமார் பாசு அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த செவ்வணக்கம்.

No comments:

Post a Comment