Thursday 1 June 2017

பசும்பொன்னில் ஒருநாள்

அக்டோபர் 30ம் தேதி முடிந்து இன்னும் இரு வாரங்கள் கூட முழுமையடவில்லை..அதற்குள் அடுத்த வருட குருபூஜை என்று வருமோ என்ற பேராவல் மனதை நச்சரிகின்றது..இரண்டாம் பசும்பொன்னாகவே மாறிவிட்ட மதுரை கோரிபாளையம் தேவர் திருமகனார் சிலை..கம்பீர தோற்றம் என்றாலும் அந்த முருகப்பெருமானின் தெய்வ கடாட்சம் தவழும் எங்கள் தெய்வீக திருமகனாரின் திருமுகத்தில்..எத்தனை எத்தனை பால்குடங்கள்..எத்தனை எத்தனை முளைபாரிகள்..எத்தனை எத்தனை மாலைகள் அந்த தெய்வத்தின் சிலையை அலங்கரிக்க..ஒரு வழியாக அங்கிருந்து பசும்பொன் மண்ணை நோக்கிய ஒரு பயணம்..80 கிலோமீட்டர் பயணம் நெடுக வாகனங்கள், அத்தனையும் பசும்பொன் மண்ணை நோக்கி..நதிகள் பல கடலில் சங்கமிப்பதை போல் தென்னகத்தின் அத்தனை சாலைகளும் அன்றைக்கு பசும்பொன்னை நோக்கியே சென்று சங்கமிக்கும்..ஆர்ப்பரிக்கும் அரசியல் இயக்கங்களின் அணிவகுப்பு ஒரு பக்கம்..அமைதியாக ஒரு ஆன்மீக பயணம் போல் தெய்வ தரிசனம் வேண்டி பொது மக்கள் கூட்டம் ஒரு பக்கம்..ஒரு இனம் புரியாத உணர்வு நம் தேகம் முழுக்க..இயற்கையின் இன்னல்கள் (அது கடும் மழையாக அல்லது கடும் வெயிலாக) கூட தோற்றுப்போகும் எங்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தின் முன்னால்..அரசாங்கத்தின் 144 தடை எங்களுக்கு எம்மாத்திரம்..?? தடைகளை வெற்றி தடங்களாக மாற்றிய எங்கள் தேவர் திருமகனாரின் குருபூஜைக்கு 144 தடை எப்படி எடுபடும்?? காவலுக்கு இருக்கும் போலீஸ் அதிகாரிகள் கூட அலைமோதும் மக்களிடம் அக்கறையோடு சொல்கிறார்கள் "கோவிலுக்கு இந்த வழியில் செல்லவும் என்று"..அவர்களுக்கு கூட தெரியும் பசும்பொன் ஒரு கோவில் தான் என்று..கோவிலுக்கு உள்ளே சென்றால் எங்கள் பத்தரை மாற்று தங்கத்தின் மேல் தங்க கவசம்..ஒரு நொடி தரிசனம் என்றாலும் அதை முடித்து அந்த ஒரு பிடி திருநீறு வாங்க மீண்டும் ஒரு வருடம் காத்திருக்கும் கூட்டம் தான் எங்கள் கூட்டம்..எதற்கும் அஞ்சாத மண்ணை
ஆண்ட, மக்களின் மானத்தை காத்த இந்த கூட்டம்..

அரசியல்,ஆன்மீக தலைவர் என்பதையும் தாண்டி பசும்பொன் தேவர் ஒரு மகாயோகி தான்.அவர் வாக்கு தெய்வ வாக்கு தான்.இளம்பிள்ளைகளால் தோற்கடிக்கப்படுவாய் என காமராஜரை அவர் கூறியது முதல் தண்ணீரை விலை கொடுத்து வாங்கவேண்டிய நிலை ஏற்படும் என்பது வரை அவர் கூறிய அனைத்துமே நடந்துக்கொண்டிருக்கிறது.ஆம்! தேவரின் வாக்கு தெய்வ வாக்கு தான்.தேவரை சரியாக படித்தோம் என்றால் தேவரை தவிர வேற யாரையும் தலைவராக ஏற்க மனம் ஒப்பாது.நாட்டு மக்கள் ஒருவரை தலைவராகவும்,தெய்வமாகவும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்றால் அது பசும்பொன் தேவரை மட்டும் தான்.அதனால் தான் அண்ணா,எம்ஜிஆர்,ராமசாமி நாயக்கர்,காந்தி,நேரு போன்ற தலைவர்களின் நினைவுநாள்களை விட தேவர் ஜெயந்தி விழாவில் தான் மக்கள் அதிகமாக கூடுகிறார்கள்.இதுதான் அரசியல் கட்சிகளுக்கும்,ஆட்சியாளர்களுக்கும் உறுத்தலாகவே உள்ளது.பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடும் அந்த நன்னாளில் அரசியலாக மாறிவிடுவார்கள் என்ற அச்சம் அனைவருக்கும் உள்ளது.இந்த தன்னெழுச்சியான மக்கள் கூட்டத்தை குறைக்க அந்த மக்களின் மீது அடக்குமுறைகள் ஏவப்படுகிறது.அந்த விழாவிற்கு தடை போடப்படுகிறது.பசும்பொன்னில் மட்டுமே கூடிய மக்கள் கூட்டம் தடையினால் தேவர் சிலை உள்ள இடங்களில் எல்லாம் ஒன்றுகூடி கொண்டாடினர்.எந்த கொம்பனாலும் இந்த தன்னெழுச்சியை அடக்கமுடியாது என்பதை ஒவ்வொரு குருபூஜை விழாவின் போதும் மக்கள் உணர்த்திக்கொண்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment