Thursday 23 November 2023

கவர்னர் உரை மீது பசும்பொன் தேவர் பேச்சு

சுதந்திர விழாவில் இந்த ராஜ்யத்தின் கவர்னர் பெயரால் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்திருக்கிறார்கள். அதாவது சென்னையில் இருக்கப்பட்ட சிலைகளுக்கெல்லாம் பூமாலைகள் போட்டு அலங்கரிக்கச் செய்தார்கள். அந்தச் சிலைகளில் பெரும்பாலும் ஆங்கிலேயருடையது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. 

இந்த நாட்டு மக்களை அடிமையாக்கி அவர்களுக்குப் பல இன்னல்களை இழைத்து, இந்நாட்டுப் பெண்களை கற்பழித்து அவமானப்படுத்திய அந்த ஆங்கிலேயர்களுடைய சிலைகளுக்கு இந்த அரசாங்கம் அலங்காரம் செய்யச் சொன்னார்கள் என்று சொன்னால் இது ஒரு சுதந்திர அரசாங்கமா? 

தன்மானமுள்ள அரசாங்கமாக இருந்திருந்தால், உண்மையாகவே, சுதந்திரத்தில் அபிமானம் கொண்ட அரசாங்கமாக இருந்திருந்தால், நம்மை அடிமைப்படுத்தி இழிவுபடுத்திய அன்னியர்களுடைய சிலைகளுக்கு சுதந்திர விழாவின்போது அலங்காரங்கள் செய்திருக்கமாட்டார்கள்.

 அவைகளையெல்லாம் அவ்விடங்களிலிருந்து பெயர்த்தெடுத்துக்கொண்டுபோய் மியூசியத்தில் போட்டிருப்பார்கள். அந்தக் காரியத்தைச் செய்யவில்லை, இந்த சுதந்திர வீரர்கள், அவமானச்சின்னமாக சென்னையிலே இருக்கும் சிலைகளுக்கு அலங்கரித்தது இந்தச் சர்க்கார் என்று சொன்னால் இது சுதந்திர சர்க்கார் செய்யக்கூடிய காரியமா? இது மனிதத் தன்மைக்கு ஏற்றதா? தன்மானமுள்ளவர்கள் செய்யக்கூடிய செயலா? என்று மட்டும் கேட்டுவிட்டு இது சட்டசபையாக இருப்பதால் வேறு எப்பதத்தையும் மேற்கொண்டு உபயோகிக்காமல் நிறுத்திக் கொள்ளுகிறேன். - #பசும்பொன்_தேவர்.

24.2.1954ல் கவர்னர் உரையின் மீது சட்டசபையில் பசும்பொன் தேவர் ஆற்றிய சொற்பொழிவு.

நூல் : #பொக்கிஷம் 300வது பக்கம்.

பதிவு : Sadaiyandi Puregold Sms

No comments:

Post a Comment