Tuesday 12 December 2017

திருப்பதி வெங்கடாசலபதி

திருப்பதி இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவ தலமாகும். இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் இது ஒன்று. இங்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இத்தலம் வைஷ்ணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது. இந்த பகுதியில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுள்ள திருமலையும், ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் கொண்டுள்ள திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும் பொதுவில் திருப்பதி என்றே பக்தர்களால் போற்றப்படுகிறது. திருமலை மேல்திருப்பதி என்றும் மற்றது கீழ் திருப்பதியெனவும் குறிப்பிடப்படுகிறது.

இந்த வெங்கடேஸ்வரா ஆலயம் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும் இது பல ராஜாங்கங்களால் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. முதன்முதலில் இக்கோவில் கருணாகரத் தொண்டைமான் கருணாகரத் தொண்டைமானின்  மன்னரால் ஆக்கம் பெற்றது.

மதுரை மீனாட்சியம்மன் கோவில், அரங்கநாதசுவாமி கோவில் ஆகியவை இசுலாமியர்களால் சூறையாடப்பட்டபோது தென்னிந்தியாவில் தப்பி இருந்த இடம் திருப்பதி மட்டும்தான். இந்த இசுலாமிய பிரவேசங்களின் பொழுது ஸ்ரீரங்கத்தில் இருந்த திருவரங்கர் திரு உருவச் சிலை திருப்பதிக்கு கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த நிகழ்வை குறிப்பதற்காக கட்டப்பட்ட ரங்கநாத மண்டபம் இன்றும் திருப்பதியில் இருக்கிறது. இசுலாமியர்களிடமிருந்து திருமலை கோயில் தப்பியதற்கு சுவாரசியமான வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது. அந்த முகலாயப்படையினர் மலையின்மேல் என்ன கோயில் இருக்கிறது என்று கேட்டபோது அவர்களின் நோக்கத்தையும் பழக்க வழக்கங்களையும் நன்கறிந்த உள்ளூர் மக்கள் பன்றிக் கடவுளின் கோயில் என்றனராம். மக்கள் குறிப்பிட்டது வராஹப் பெருமாளின் திருக்கோயிலை. இந்தப் பெருமாளை தரிசித்தப்பின்னர்தான் ஏழுமலையானை தரிசிக்கவேண்டும் என்கிற சம்பிரதாயம் இருக்கிறது. பன்றிகளின் மீது முகலாயர்களுக்கு இருக்கும் வெறுப்பால் அவர்கள் திருமலைக்கு செல்லும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டனர் என்று சொல்லப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் இருந்தாலும் தமிழர்களின் ஆலயம் இது.

No comments:

Post a Comment