Sunday, 26 May 2024

கிரிக்கெட் விளையாட்டடில் அசத்தும் இராமநாதபுரம் மாவட்ட SP ஜி.சந்தீஷ்

கோவையில் இருந்து கிராமப்பகுதியான இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மாற்றமாகி வந்த புதிய SP ஜி.சந்தீஷ் சார் அவர்களிடம்  அனைத்து வசதியும் இருக்கும் நகரமான கோவையில் இருந்து மாறி போகிறீர்களே எதை நீங்க ரொம்ப மிஸ் செய்கிறீர்கள்? ஹோட்டல், பெரிய மால், தியேட்டரா  என கேட்டபோது,  SP சார் சொன்ன பதில் கிரிக்கெட் என்றாராம்.

ஆம் கோவையில் சிறந்த காவல்துறை அணியை கட்டமைத்து வைத்திருந்தாராம். தனக்கு மிக பிடித்தது கிரிக்கெட் விளையாட்டு,  இனி விளையாட வாய்ப்பு அமையாதே என வருந்தினாராம்.

ஆனால் இராமநாதபுரம் வந்த பிறகு அந்த கவலை தற்போது முற்றிலும் நீங்கிவிட்டது. கோவையை போல் இராமநாதபுரத்திலும் சிறந்த காவல்துறை கிரிக்கெட் அணியை கட்டமைத்து மிகப்பெரிய கிரிக்கெட் போட்டி தொடரை சிறந்த முறையில் நடத்தி முடித்து விட்டார். இதுபோன்ற நிகழ்வு காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவையும், இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தையும் உத்வேகப்படுத்தும்.

பொதுவாக இராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்த காவல்நிலையங்களில் அனுமதி எளிதில் கிடைக்காமல் அழையும் நிலைத்தான் முன்பு இருக்கும்.

ஆனால் இனி அந்த நிலை இருக்காது. விளையாட்டில் ஆர்வம் கொண்ட சந்தீஷ் SP சார் போன்றோர் தயவால் கிராமங்களில் விளையாட்டு போட்டிகளை நடத்த எளிதில் அனுமதி இனி கிடைக்கும். 

இது போன்று தொடர்ச்சியாக இனி தாலுகா அளவிலும் காவல்துறை மற்றும் பொதுமக்கள் அணிகள் கலந்துகொள்ளும் விளையாட்டு போட்டிகள் நடத்தினால், செல்போன்களிலும், போதை பொருட்கள், மதுபானம் பயன்படுத்துவதிலிருந்து விலகி விளையாட்டில் இளைஞர்கள் கவனம் செலுத்த இது வழிவகுக்கும். 
புகைப்படம்: 1
ஜி.சந்தீஷ் SP சார் முன்னின்று நடத்திய மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று முடிவுபெற்று பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய SP சார் அவர்களுக்கு இராமநாதபுரம் மன்னர் நாகேந்திர சேதுபதி பரிசு வழங்கிய காட்சி.
புகைப்படம்: 2 
வெற்றி பெற்ற அணியினர் SP சார் மற்றும் மன்னரோடு குரூப் போட்டோ எடுத்துகொண்ட காட்சி.


No comments:

Post a Comment