ராமாயண வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் இக்கோயில் பிரகாரங்கள், கோபுரங்களை ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் கட்டினர்.
இன்றும் அக்கோவிலை சேதுபதி மன்னர்கள் போற்றி பாதுகாத்து வருகிறார்கள். இக்கோயிலில் தரிசிக்க அக்காலத்தில் பாத யாத்திரையாக வந்த பக்தர்கள், பாம்பன் கடலை கடந்து செல்ல வேண்டும். கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், குதிரையில் வரும் மன்னர்கள், வீரர்கள் கடலை கடக்கும் முன் ஓய்வெடுத்து செல்ல பாம்பன் நதியின் இரு கரையிலும் சத்திரத்துடன்(தங்கும் விடுதி) கூடிய விநாயகர் கோயில் கட்டினர்.
இந்த விநாயகரை தரிசித்து பின்னர் சேதுபதி மன்னர்கள் பக்தர்களுக்காக ஏற்பாடு செய்து வைத்துள்ள இலவச படகு போக்குவரத்து மூலம் பாம்பன் கடலை எளிதில் கடந்து செல்லலாம், பின் ராமேஸ்வரம் கோயிலில் நீராடி சுவாமி, அம்மனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
இராமேஸ்வரம் செல்லும் 100% பக்தர்களும் தரிசனம் செய்து போன பழமையான இக்கோவில் பாம்பன் பாலம் வந்த பின்பு பக்தர்களின் பார்வையில் இருந்து மறைந்து போனது.
இன்றும் இந்த விநாயகர் கோயிலை ராமநாதபுரம் மன்னர்களின் சமஸ்தானம் தேவஸ்தானம் பாதுகாத்து பராமரித்து வருகிறது.
இடம்: பாம்பன் பாலத்தில் ஏறுவதற்கு முன்பு வலதுபுறம் கவனித்தால் மேலே கோபுரம் மட்டும் தெரியும். கோவிலுக்கு இறங்கி செல்ல படிகள் உண்டு.
No comments:
Post a Comment