காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்த பார்வர்ட் பிளாக் காங்கிரஸை எதிர்த்து அரசியல் செய்தது.
திமுக கட்சியிலிருந்து பிரிந்த அதிமுக திமுகவை எதிர்த்து அரசியல் செய்தது.
பார்வர்ட் பிளாக் கட்சியிலிருந்து பிரிந்த 999 கட்சிகளும் பார்வர்ட் பிளாக்கை எதிர்த்து தான் அரசியல் செய்கின்றன.
யாரு வந்து எந்த காரணத்தை சொன்னாலும் இது தான் உண்மை . இல்லை என்பவர்கள் உண்டா? அரசியல் செய்ய 1008 கட்சி இருக்கு ஆனால் ஏன் பார்வர்ட் பிளாக் என்ற பெயரை பயன்படுத்த வேண்டும். என்னமோ நீங்க பிரிந்த உடன் நேதாஜி தேவர் ஆரம்பித்த கட்சி என்ற வரலாறு மாறிவிடுமா! பிரிந்து சென்றவர்கள் சாதித்தது என்ன? உங்களால் அப்படி என்ன சாதித்து விட முடியும்?. உங்களுக்கு தேவரைப்போல் தான் தலைமை வேண்டுமென்றால் செத்து தான் போகனும், அப்படியே போனாலும் தேவரைய்யா இருக்கிற சொர்கத்திற்கு போகமுடியாது.நம்மை போன்ற பாவிகளுக்கு நரகலோகம் தான் கிடைக்கும். அப்பவும் நமக்கு தேவரைய்யா தலைவராக கிடைக்க மாட்டார்.
"எனது கட்சி
அகில இந்திய பார்வர்ட் பிளாக்
எனது கட்சி நிருவனர்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் "
இந்த இரண்டு வரி போதும் எனது கட்சி பெருமை பேசிட.
எங்கே நீங்க எழுதுங்க உங்க கட்சியை பற்றி லட்சமென்ன கோடி பக்கம் எழுதினாலும் என் கட்சியைப் பற்றி நான் எழுதிய இரண்டு வரிக்கு ஈடாகாது.
நமக்கான பெருமையை நாமே அழித்த பாவத்தை செய்து பாவியாகி விட வேண்டாம்.
நாம் இருப்போம் நம் கட்சியில்
நேதாஜியும் தேவரும் இருந்த பார்வர்ட் பிளாக் கட்சியின் தொண்டன். ஆமா மொட்டையா பார்வர்ட் பிளாக் னா எந்த கட்சினு தெரியாதுல.
மன்னிக்கவும்! நன்றி!
ஆக்க பூர்வமான விவாதத்திற்கும் தயார்
No comments:
Post a Comment