Thursday 23 November 2023

வைகையின் பூர்வீக ஆயக்கட்டு பகுதி இராமநாதபுரம்

வைகை பூர்வீக ஆயகட்டு பகுதி இராமநாதபுரத்திற்கு தண்ணீர் திறப்பு. 

  வைகை அணை கட்டியதால் 100% பாதிப்பு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு தான். ஏனென்றால் வைகை நதியை கடலில் கலக்க விடாத அளவிற்கு இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களால் பலநூறு கண்மாய்கள் பாராமரித்து மக்களின் விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தனர். அதுவும் பத்தாது என கேரளா மாநிலத்தில் அரபிக்கடலில் வீனாக கலந்து வந்த முல்லை எனும் ஆற்றையும் பெரிய ஆறு எனும் இரண்டு ஆறுகளைகளையும் தமிழகத்திற்கு திருப்பி  இரண்டு ஆறுகளின் பெயரையும் ஒன்றாக்கி முல்லைப்பெரியாறு எனும் அணை கட்டும் திட்டத்தை உருவாக்கினார் சேதுபதி மன்னர். அது மன்னரால் ஆரம்ப பணிகள் துவங்கினாலும் முடியாமல் போக பின்னாலில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிறைவேறியது. இராமநாதபுரம் பெரும் பலன் பெற்றது.

ஆனால் பாருங்கள் சுதந்திர இந்தியா உருவான சில ஆண்டுகளிலேயே வைகை அணை எனும் பெயரால்  இராமநாதபுரம் மாவட்ட ( ஒன்றுபட்ட இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் சேர்ந்தது) மக்களின் உரிமைகள் நாசமானது. வைகை நதிக்கு அணையே தேவையில்லை. ஏனென்றால் அது நேரடியாக கடலில் கலப்பதே இல்லை. வரலாறு காணத வெள்ளம் வந்தால் தான் கண்மாய்கள் நிறைந்து தத்துகள்  வழியாக நீர் வெளியேறி கடலுக்கு என்றாவது செல்லும். அந்த அளவிற்கு இராமநாதபுரத்தில் வழிமுறைகளை கண்மாய்கள் மூலம் செய்து இருந்தார்கள். ஆனால் ஏதோ ஒரு தேவைக்காக அன்றைய அரசு அணை கட்டியது.

ஆனால் வைகை கட்டும் போதே உரிமைகளை விட மறுத்து அப்போதைய அமைச்சராக இருந்த இராமநாதபுரம் மன்னர் சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி அவர்கள் இராமநாதபுரம் பகுதிதான் வைகை அணையின் பூர்விக பயன்பாட்டு பகுதி எனும் உரிமையை பதிவு செய்ததோடு இராமநாதபுரம் மாவட்ட அனுமதியோடு தான் அனையில் நீர் திறப்பு சம்பந்தப்பட்ட அனைத்து நடைமுறையும் இருக்க வேண்டும் என பல விதிகளை அன்றைய அரசை ஏற்க வைத்தார்.  

ஆனால் அணை கட்டப்பட்ட பின்பு. இராமநாதபுரத்தில் வறட்சி கோரத்தாண்டவம் ஆட துவங்கியது. இராமநாதபுரம் நெற்களஞ்சியம் என போற்றப்பட்ட பெரிய கண்மாய் கொண்ட R.S.மங்களம் வறண்டது. குண்டாறு மலட்டாறு நீர் பிடிப்பு நீர்களும் வைகைநோக்கி போனதால் ஆப்பநாடு வரண்டது. ஆப்பநாடு வறட்சியில் தாங்க முடியால் 40% முதல் சில பகுதியில் 100% வரை இடம்பெயர்ந்து பிழைக்க மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு நிரந்தரமாக புலம் பெயர்ந்தார்கள். பெரிய கண்மாய்கள் கருவேலங்காடாக மாறியது. 

ஒரு உண்மை தெரியுமா தமிழ்நாட்டிலேயே 100ஏக்கருக்கும் அதிகமான பெரிய கண்மாய்கள் கொண்ட மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம் தான். ஆனால் வைகை அணையால் கண்மாய்கள் கருவேலங்காடாக போனது. 

வைகை அணை நிறைந்தால் அவ்வபோது அன்றைக்கு எழுதப்பட்ட விதிகளின் பலனால் ஏன்றோ தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆனாலும் வந்து சேருகிறதா?  வந்தாலும் ஒழுங்காய் கால்வாய்கள் மூலமாக கண்மாய்களை நிரப்ப முடிகிறதா என்றால் இல்லை. 

இனியாவது அதை முறைப்படுத்த வேண்டும் அனைத்து கண்மாய்களுக்கும் நீர் சென்று சேர வேண்டும்.

கவர்னர் உரை மீது பசும்பொன் தேவர் பேச்சு

சுதந்திர விழாவில் இந்த ராஜ்யத்தின் கவர்னர் பெயரால் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்திருக்கிறார்கள். அதாவது சென்னையில் இருக்கப்பட்ட சிலைகளுக்கெல்லாம் பூமாலைகள் போட்டு அலங்கரிக்கச் செய்தார்கள். அந்தச் சிலைகளில் பெரும்பாலும் ஆங்கிலேயருடையது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. 

இந்த நாட்டு மக்களை அடிமையாக்கி அவர்களுக்குப் பல இன்னல்களை இழைத்து, இந்நாட்டுப் பெண்களை கற்பழித்து அவமானப்படுத்திய அந்த ஆங்கிலேயர்களுடைய சிலைகளுக்கு இந்த அரசாங்கம் அலங்காரம் செய்யச் சொன்னார்கள் என்று சொன்னால் இது ஒரு சுதந்திர அரசாங்கமா? 

தன்மானமுள்ள அரசாங்கமாக இருந்திருந்தால், உண்மையாகவே, சுதந்திரத்தில் அபிமானம் கொண்ட அரசாங்கமாக இருந்திருந்தால், நம்மை அடிமைப்படுத்தி இழிவுபடுத்திய அன்னியர்களுடைய சிலைகளுக்கு சுதந்திர விழாவின்போது அலங்காரங்கள் செய்திருக்கமாட்டார்கள்.

 அவைகளையெல்லாம் அவ்விடங்களிலிருந்து பெயர்த்தெடுத்துக்கொண்டுபோய் மியூசியத்தில் போட்டிருப்பார்கள். அந்தக் காரியத்தைச் செய்யவில்லை, இந்த சுதந்திர வீரர்கள், அவமானச்சின்னமாக சென்னையிலே இருக்கும் சிலைகளுக்கு அலங்கரித்தது இந்தச் சர்க்கார் என்று சொன்னால் இது சுதந்திர சர்க்கார் செய்யக்கூடிய காரியமா? இது மனிதத் தன்மைக்கு ஏற்றதா? தன்மானமுள்ளவர்கள் செய்யக்கூடிய செயலா? என்று மட்டும் கேட்டுவிட்டு இது சட்டசபையாக இருப்பதால் வேறு எப்பதத்தையும் மேற்கொண்டு உபயோகிக்காமல் நிறுத்திக் கொள்ளுகிறேன். - #பசும்பொன்_தேவர்.

24.2.1954ல் கவர்னர் உரையின் மீது சட்டசபையில் பசும்பொன் தேவர் ஆற்றிய சொற்பொழிவு.

நூல் : #பொக்கிஷம் 300வது பக்கம்.

பதிவு : Sadaiyandi Puregold Sms

Sunday 5 November 2023

ஆப்பநாடு மறவர் சங்க தலைவராக டாக்டர் ராம்குமார் தேர்வு


#டாக்டர்_தலைவர்_ஆனார்.
புகழ்பெற்ற ஆப்பநாடு மறவர் சங்க தலைவராக டாக்டர் ராம்குமார் தேர்வு.
  நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த சங்கம்  இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் பகுதில் 448கிராமங்களின் தலைவராக அப்பகுதியின் மிக உயந்த மரியாதைக்குரிய பதவியாக கருதப்படுகிறது.

இப்பதவியில் வரலாற்றில் முதல்முறையாக MBBS படித்த மருத்துவர் அதுவும் மிக இளம் வயது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் டாக்டர் ராம்குமார் அவர்கள்.