Saturday 28 October 2017

1959 பிப்ரவரி 13

"Mr. Muthuramalinga Thevar the last speaker of the day, held the attention of the house with his fiery oratory"

1959 பிப்ரவரி 13... இன்றுதான் பசும்பொன் முத்துராமலிங் தேவர் நாடாளுமன்றத்தில் முழங்க நேரம் ஒதுக்கப்பட்டது... பின் 16 ஆம் தேதியாக அது மாற்றப்பட்டது... இறுதியில் 17ஆம் தேதியின் அந்த வாய்ப்பு பசும்பொன் தேவருக்கு கிடைத்தது. அதுவும் மாலை 4.45க்கு... மாலை 5 மணிக்கு நாடாளுமன்றம் முடிந்துவிடும்... இந்த இடைப்பட்ட கால் மணி நேரத்தில் தமது கருத்து முழுவதையும் பசும்பொன் தேவர் வெளியிட வேண்டும். எழுந்தார் பசும்பொன் தேவர்... ஆங்கிலத்தில் தொடர்ந்தார் முழக்கத்தை... அதுவரை கேட்டறியாத பசும்பொன் தேவரின் ஆங்கில முழக்கத்தை கேட்டு வடமாநிலத் தலைவர்கள் விழகள் மூட மறந்தன.

மறுநாள் வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸின் டெல்லிப் பதிப்பு.

"Mr. Muthuramalinga Thevar the last speaker of the day, held the attention of the house with his fiery oratory" என்று தேவரின் நாடாளுமன்ற முழக்கம் பற்றி குறிப்பிட்டது.

இனி, நாடாளுமன்றத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் முழக்கம்... தமிழில் தந்திருப்பது ஏ.ஆர். பெருமாள்.

ஐயா,

ஜனாதிபதியவர்களின் தலைமையுரை மீது பேச வேண்டிய இவ்வேளையில், நமது வெளிநாட்டுக் கொள்கை, காமன்வெல்த் தொடர்பு முதலியவை பற்றி இடையே கொஞ்சம் விவரிக்க விரும்புகிறேன் - விவரிக்க வேண்டியது அவசியமும் கூட.

காமன்வெல்த் என்பதன் பெயரால் நாம் ஒரு கூட்டுறவில் பிணைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், நாம் பிணைக்கப்பட்டுள்ள காமன்வெல்த் என்ற கூட்டுறவின் பங்காளிகள், நமது நாட்டையும், செல்வத்தையும் சேர்த்துப் பங்குரிமை கொள்ள ஆசைப்படுகிறார்கள். பொதுச் சொத்து என்றும் கருதுகிறார்கள். ஆனால் நமது சுயாதிக்கத்தை அவர்கள் மதிப்பதே இல்லை. நமது நாட்டையும் செல்வத்தையும் அவர்கள் நேசிக்கிற அளவுக்கு நமது சுயாட்சியை நேசிக்கவில்லை என்பதால் இது ஓர் அபாயகரமான கூட்டுறவு என்றே குறிப்பிடலாம்.

மேலும், நாம் சாதிக்கும் ஒவ்வொரு சாதனையையும் அஹிம்சா முறையில் சாதித்துவிட்டதாக ஒரு அபிப்பிராயத்தை உலகெங்கும் உண்டாக்கி விட்டிருக்கிறோம். ஆனால் அகிம்சை என்ற தத்துவம் சிந்திப்பதிலும், பேசுவதிலும் உள்ள எளிமை, அதை நடைமுறைப்படுத்துவதில் இல்லை என்பது அநேகமாக நம் எல்லோருக்கும் தெரியும்.

அகிம்சை என்பது அரசியல் ரீதியான செல்பாடுகளுக்கு ஒத்தியங்க அல்லது உடன்படுத்தி இயக்க இயலாத ஒரு தத்துவம்! அதைப் பேசலாம் - எழுதலாம், ஆனால் அரசியலில் அதைச் செய்ய முடியாது என்பது கண்கூடு.

எல்லா நாடுகளிலும் - எல்லாப் பகுதிகளிலும், இரண்டு கட்சிகள் உண்டு. ஒன்று வலதுசாரிக் கட்சி - மற்றொன்று இடதுசாரிக் கட்சியாக இருக்கும் - இருந்து வருவதை நாமும் அறிஅவாம். இரண்டு கட்சிகளும் ஒன்றை ஒன்று வேறுபடுமேயன்றி தேசியத்தை - தேச நலனைப் பற்றிய துறையில் வேறுபடாது. இரண்டு தேச பக்தக் கட்சிகள் தான். இரண்டுக்கும் மக்கள் ஆதரவு உண்டு, இரண்டு கட்சிகளுமே நாட்டுக்கான கடமையைச் செய்து வருகின்றன. அதேபோல இந்த நாட்டிலும் வலதுசாரி - இடதுசாரி என்ற முறையில் இயங்கினர் - இயங்குகின்றனர்.

தேச விடுதலைக்காகப் பல பயங்கரப் புரட்சிகளைச் செய்த நமது நாட்டு இடதுசாரிகளில், பகவத் கீதையைக் கையில் வைத்துக்கெண்டே அந்நியரின் தூக்கு மேடையில் பலியானோரும், அந்தமான் தீவுகளில் ஆவி துறந்தோரும் கொஞ்சமல்ல, அவர்கள் தேசத்திற்காகவே கடமையைச் செய்து உயிரை இழந்தவர்களாக இருந்தாலும், காந்தீயர்களாக இருக்கவில்லை என்றே கருதப்பட்டார்கள். இதனால் அவர்கள் அடியிட்ட சுதந்திர இந்தியாவில் அவர்களுக்குரிய சிறப்புக்கு இடமில்லாது போய்விட்டது. அதாவது, ஒருவன் தேசத் தியாகியாக மட்டும் இருந்தால் போதாது ? அவன் தேசபக்தன் - தியாகி - என்பதை விட காந்தீயன் - காந்தி பக்தக் கூட்டத்தில் ஒருவனாக இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள் : போகட்டும்!

'அகிம்சை' என்ற கொள்கை நாம் அடிமைகளாக இருந்தபோது ஓரளவுக்குச்சரி, ஆனால் நாம் இப்பொழுது ஒரு குடியரசை நில்மாணித்திருக்கிறோம். நமது சர்க்கார் கோடானுகோடி ரூபாய்களைக் கொண்டும் ராணுவச் செலவைச் செய்கிறது. போர்ச்சுகலும், எல்லைப் புறங்களில் பாகிஸ்தானு புரிகிற கொடுமைகளைப் பற்றி, பேசும்போது கூட அகிம்சையைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளத் தவறுவதுமில்லை.

கொள்கையோ அகிம்சை; வருமானத்தில் பெரும்பகுதி செலவிடுவதோ ராணுவத்துக்கு! அதே சமயம் அந்நியர்களின் அக்ரமத்திற்கு முனூனே அகிம்சைப் பேச்சு - ஆனால், அதே சமயம் நாகா மலை ஜாதியினர் மீது பாய ராணுவத்தை ஏவிவிடுகின்றோம் - நமது அரசியல் எதிர்ப்பாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகளைச் சாய்க்கத் துப்பாக்கிகளின் வாய்களைத் திறந்துவிட அனுமதிக்கிறோம்! இது எந்த ரக அகிம்சாவாதம் என்பதை எவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.

எந்தக் கொள்கையும், எந்தச் சமயத்திலும் செயலோடு சம்பந்தப்பட வேண்டும். செயலோடு சம்பந்தப்படும் கொள்கையைத்தான் உருவாக்கவும் வேண்டும். பேசுவதற்குக் கொள்கை, செய்வதற்கு வேறு முறை என்றால் அக்கொள்கை வெறும் பிரச்சார அந்தஸ்தோடு நின்றுவிடும். அதற்குச் சாகாத்தன்மையும் ஏற்படாது என்பதைக் கூறிக்கொள்கிறேன்.

யுத்த முடிந்த ஆரம்பகாலத்தில் எல்லோருமே அமைதி - சமாதானம் பற்றிப் பேசினார்கள். அதற்காக ஐ.நா. சபையும் உண்டாக்கப்பட்டது. ஆனால், சமாதான சாத்தியத்திற்காக உண்டாக்கப்பட்ட உலகப் பொதுச் சபைக்கு ஐக்கிய நாடுகள் சபை என்று பெயர்தான் வைக்கப்பட்டதேயன்றி, அதன் நோக்கமெல்லாம் ஐக்கியத்தைப் பிளப்பதாகவே இருக்கிறது. அது பேசுகிற சமாதனாப் பேச்சு, செயலை நெருங்கவே அனுமதிக்கப்படவில்லை.

Friday 27 October 2017

தேவர் மறைவு -இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 'ஜன சக்தி'யில் 30.10.1963 அன்று வெளிந்த
தலையங்கம்:

திரு உ.முத்துராமலிங்கத் தேவர் மறைவு

பழம்பெரும் தேசபக்தர், செழுந்தமிழர்தம்
தீரமிகு தலைவர் பசும்பொன் உ.முத்துரா
மலிங்கத் தேவர் நேற்று செவ்வாய் அதி
காலை 4.30 மணிக்கு மதுரைத் திருநக
ரில் காலமானார் எனும் தீச் செய்தியினை
கேட்டு அளப்பரிய துயரமுற்றோம். திரு. தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாற் றினை எண்ணுங்கால், மகிமை பொருந்
திய தேச விடுதலைப் போராட்டத்தின் உக்ர நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்
றன.

1937-ம் ஆண்டில் நடைபெற்ற சென்னை
மாகாண சட்டசபைத் தேர்தலின்போது,
தோழர் ஜீவா, எஸ்.சத்தியமூர்த்தி, மட்டப்
பாரை வெங்கட்ராமைய்யர் ஆகியோரு
டன் சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தேனினுமினிய செந்தமி
ழில், தமிழ் மரபின் வீரத்தோடு, சுதந்திர
ஆவேசமிக்க சொற்பொழிவுகளால் தமிழ் மக்களைத் தட்டியெழுப்பிய போர்வீரர்
தேவர் என்றால் மிகையாகாது.

அத்தேர்தலில்தான் பிரிட்டிஷ் எகாதிபத் திய ஆட்சியாளர்களின் சுமைதாங்கிக
ளாக இருந்துவந்த ஜஸ்டிஸ் கட்சியின் பெரும்  பெருந்தலைகளெல்லாம் உருண்
டன. திரு தேவர் அவர்களும் இராமநாத புரம் ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் அபே
ட்சகராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் மந்திரி சபையும் அமைந்தது.

கால் நூற்றாண்டுக்கு முன்,ஏகாதிபத்திய
எதிர்ப்புப் போராட்டத்துடன் கூடவே,தொழி
லாளி வர்க்கப் போராட்டங்களையும் இணைத்து தமிழ்நாடு காங்கிரஸ் சோஷ
லிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஜீவா, ராமமூர்
த்தி, சீனிவாசராவ், ஏ.எஸ்.கே., இளங்கோ,
முருகேசன் ஆகியோர் நடத்திக் கொண்டி
ருந்த சமயத்தில், சுபாஷ் சந்திர போஸின்
பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழகத் தலைவர் தேவரும் சேர்ந்து தொழிலாளி
வர்க்கத்தைத் தட்டியெழுப்பினர். அக்கா லத்தில் தேவரின் பார்வர்டு பிளாக் கட்சி
யின் தீவிர உறுப்பினராக மாணவர் மத்தி
யில் போராட்டங்களை நடத்தி வந்தவர்க ளில் தோழர் கே.பாலதண்டாயுதம் ஒருவ ராகும்.

1938-ம் ஆண்டில் மதுரை நகரில் முதல் தடவையாக அரிவாள் சுத்தியல் பொறிக் கப்பட்ட செங்கொடியின் கீழ் பசுமலை மகாலட்சுமி மில் தொழிலானர் சங்கம் தோழர் ஜீவா தலைமை வகித்த கூட்டத் தில் நிறுவப்பட்டபோது, போஸ் கட்சித் தலைவர் திரு முத்துராமலிங்கத் தேவர்
அச்சங்கத்தின் தலைவராகவும், கம்யூனி
ஸ்ட் தலைவர் தோழர் வி. ராமநாதன் பொதுச் செயலாளராகவும் இருந்து வந்த
னர்.

அக்காலத்தில் பசுமலை பஞ்சாலைத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி யும், பழிவாங்குதலைக் கண்டித்தும் வேலை நிறுத்தம் செய்தார்கள். கருங்கா லிகளை காரிலேற்றி மில்லுக்குள் கொண்டு சென்றபோது மறியல் போராட்
டமும் நடத்தினர். அப்போது நூற்றுக்கண க்கான ஆண் - பெண் தொழிலாளர்களும்,
தலைர்களும் கைது செய்யப்பட்டு தண் டிக்கப்பட்டனர். தோழர் ஜீவா சப் - இன்ஸ்
பெக்டரால் தாக்குண்டார். அன்று ஆட்சி
பீடத்தில் இருந்த ராஜாஜி மந்திரிசபை
காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான முத்துராமலி ங்கத் தேவரையும் கைதுசெய்து சிறை யில் அடைத்தது.

தேவருடன் கூடவே, தமிழ் மாகாணக் காங் கிரஸ் கமிட்டியின் நிர்வாகக் குழு அங்கத் தினரும், அகில இந்திய காங்கிரஸ் கமி ட்டி அங்கத்தினரும், சென்னை மாகாணத்
தொழிற்ங்கக் காங்கிரஸ் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் சோஷலிஸ்டு கட்சி
பொதுக் காரியதரிசியும், 'ஜனசக்தி' ஆசி ரியருமான தோழர் ஜீவாவையும் சிறை
யில் அடைத்தனர்.

எல்லா ஜில்லா காங்கிரஸ் கமிட்டிகளும்
தேவரையும் ஜீவாவையும் விடுதலை செய்ய வேண்டுமென்று பெரும் கிளர்ச்சி
செய்ததின் பேரில் சகலரும் விடுவிக்கப் பட்டார்கள். தொழிலாளர்களுக்கு, மகா
ட்சுமி மில் தொழிலாளர்களுக்கு, ஹார்வி
மில் சம்பள அளவும், இரவு போனஸும்
கிடைத்தன. பழிவாங்கப்பட்டவர்கள் திரு ம்பவும் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்
டனர். லீவு வசதிகளும், பிரசவ அலவன் ஸும் கிடைத்தன.

சுதந்திரப் போராட்டத்திலும், தொழிலாளி
வர்க்கப் போராட்டத்திலும் மட்டுமின்றி,
அக்காலத்தில் கள்ளர் மஹாஜனங்களை
வதைத்துவந்த குற்றப் பரம்பரைச் சட்ட த்தை (சி.டி.ஆக்ட்) எதிர்த்தும் தேவரும்
ஜீவா, ராமமூர்த்தி முதலான தலைவர்க ளும் பெரும் இயக்கம் நடத்தி வெற்றியும்
பெற்றனர்.

1938 இறுதியில் காந்திஜி, ராஜாஜி ஆகி
யோரால் ஆதரிக்கப்பட்ட பட்டாபி சீத்தாரா
மய்யா ஒரு புறமும், இடதுசாரிகளால் ஆத ரிக்கப்பட்ட சுபாஷ் போஸ் மறுபுறமும் காங்கிரஸ் மகாசபையின் தலைமைப் பத
விக்குப் போட்டியிட்ட காலத்தில், தேவரும்
கம்யூனிஸ்டுகளும் சோலிஸ்டுகளும் திரி
புரா காங்கிரஸ் சென்று சுபாஷ் பாபுவை
வெற்றிபெறச் செய்தார்கள்.

1939 செப்டம்பரில் மஹாயுத்தம் ஆரம்பித் தபோது தேவரும் எல்லா இடதுசாரித் தலைவர்களும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்க ளால் பாதுகாப்புச் சிறைகளிலே அடைக்க
ப்பட்டு 4,5 ஆண்டுகள் சிறையிலே வாடி னர்.

உடல்நலக் குறைவால் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
வந்தும்கூட, அவரைக் காப்பாற்ற இயல
வில்லை. அவரது மறைவினால் துயருற்
றுக் கிடக்கும் அவரது உறவினர்களுக்கும்
இதரர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Tuesday 24 October 2017

அதிர்ந்து குழு மட்டுமல்ல நேருவும்தான

10 வருடங்கள் கழித்து அமைக்கப்பட்ட நேதாஜி "மர்ம மரண விசாரனைக்குழு" தேவரை விசாரிக்க அழைக்கிறது.

விசாரணைக்கு வந்த தேவர் அக்குழுவினரிடம் மூன்று கேள்வி மட்டுமே கேட்டார் அவை பின்வருமாறு.

1.) நேதாஜி மர்ம மறைவு குறித்து விசாரிக்க இந்த விசாரணைக்குழு ஜப்பான் நாட்டைவிடுத்து மற்ற நாடுகளுக்கு பயணம் செய்ய உத்தேசித்துள்ளதா?

இதற்கு சரிவர அவர்களிடம் பதில் இல்லை

2.) இக்குழுவிற்கு தலைவராக ஷாநவாஸ்கானுக்கு பதிலாக உயர்நீதிமன்ற அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியை தலைவராகியிருக்கலாம் அல்லது போர்க் குற்றவாளிகளின் விசாரணை ஆணையத்தின் தலைவராக இருந்த இராதாவினோத்பாலை தலைவராக நியமனம் செய்திருக்களாமே?

பதில்- இராதாவினோத்பால் நேதாஜி இறக்கவில்லை.எந்தவிதமான வானூர்தி விபத்தும் நிகழவில்லை என்றும் அறிவித்து விட்டார் அதனால் அவரை இக்குழுவிற்கு தலைவராக நியமிக்க சாத்தியமில்லை என்றார்கள்.

உடனே தேவர்- அப்படியானால் அவரை ஏன் நீங்கள் விசாரிக்கவில்லை.

குழு- நாங்கள் கல்காத்தா சென்று அவரை விசாரிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்கள்.

சரி

3.) சுபாஸ் சந்திரபோஸின் பெயர் இங்கிலாந்து வெளியிட்ட சர்வதேச போர்க் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? இல்லையென்றால் அதற்கான முறையான அறிக்கையை வெளியிட இந்திய அரசு தயாராக இருக்கிறதா?

குழு சிறிது நேரம்  மெளனம்

பதில்- நாங்கள் வெறும் விசாரணைக்குழுதான் அரசிடம் பேசிவிட்டு உங்களுக்கு சொல்கிறோம். அதுவரை தனி அறையில் ஓய்வெடுங்கள் என்று கூறி ஓடியது.

நீண்டநேர இடைவெளிக்குப் பின் வந்த குழு அரசிடமிருந்து இது சம்பந்தமான பதில்கள் எதையும் பெற இயலவில்லை என்றனர்.ஏன் என்று தேவர் கேட்டபோது இது சம்பந்தமான எந்த கோப்புகளும் அரசிடம் இல்லை என்றார்கள்.

தேவர்- அப்படியென்றால் சுதந்திர இந்திய அரசு போஸ் போர்க் குற்றவாளி இல்லையென்ற அறிக்கையை ஏன் கொடுக்கக் கூடாது? என கேட்டார்.

குழு- இதுபோன்ற கேள்விகளைக் கேட்டால் நாங்கள் எப்படி விசாரணையை தொடர்வது.

தேவர்- நான் நேதாஜியின் இயக்கத்தை சேர்ந்தவன் நேதாஜி போர்க் குற்றவாளியில்லையென்று அறிவிக்கும் வரை இந்த குழுவோடு ஒத்துழைக்க முடியாது உங்களால் முடிந்ததை பாருங்கள்.

அதிர்ந்து குழு மட்டுமல்ல நேருவும்தான்.

பதிவு- நிவேதா 23.10.2017

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

தமிழ்நாட்டில் இராமேசுவரம் என்ற ஊரில் பிறந்த வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று ஆறுமுகனை வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் வழியில் சித்திரக் கவிகள் எழுதியுள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தனது பாடல்களாலும், சாத்திரங்களாலும் தொண்டாற்றினார். முருகனின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவரியற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது. பாம்பன் சுவாமிகள் மே 30, 1929 அன்று சமாதி அடைந்தார். அவரது சமாதி கோவில் சென்னை, திருவான்மியூரில் உள்ளது.

தமது 12,13 வயதிலேயே கவிபாடும் திறமை பெற்றிருந்தார். இவருடைய முதல் பாடல் ஆசுகவியாக உருவாகிய "கங்கையைச் சடையில் பதித்து" எனத் தொடங்குவது. அருணகிரிநாதரை ஞானகுருவாகக் கொண்ட இவர் பின்னாளில் ’உபய அருணகிரிநாதர்’ என்ற பெயரும் பெற்றார்.

1894ஆம் ஆண்டு இராமநாதபுரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரப்பன்வலசை என்ற ஊரில் நிட்டையில் இறங்கினார். 35 நாட்கள் அருந்தவம் புரிந்த நிலையில் இவருக்கு முருகப் பெருமானே உபதேசம் நல்கியதாக இவரது சீடர்கள் நம்புகின்றனர். இவரது கனவுகளில் முருகன் வழிநடத்துவதாகவும் அவர்கள் நம்புகின்றனர். இவ்வாறான வழிகாட்டலில் அவர் சென்னை சென்றார். அங்கிருந்து பல தலங்களுக்கு சமயப்பயணங்கள் மேற்கொண்டார்.

அப்போது அவருடன் பழகிய திரு. வி. க இவ்வாறு கூறுவார்:

"குமரகுரு திருவல்லிக்கேணியில் தங்கியிருந்தபோது நாடோறும் மாலை வேளையில் கடற்கரை செல்வர். அவருடன் யானும் போவேன். அடிகள் வடமொழி உபநிடதக் கருத்துக்களைத் தமிழில் விளக்குவர். சாத்திர நுட்பங்களை எளிதில் வெளியிடுவர்" திரு.வி.க.வாழ்க்கை குறிப்பு பக்கம் 127.

மே 30 , 1929 அன்று காலை 7.15 மணிக்குச் சுவாமிகள் சமாதியடைந்தார்கள். சுவாமிகள் திருமேனி அலங்கரிக்கப்பட்ட புஷ்பவிமானத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மே 31 , 1929 திருவான்மியூரில் சமாதி அமைக்கப்பட்டது.

சுவாமிகள் இயற்றிய பாடல்கள்

சண்முக கவசம்
பஞ்சாமிருத வண்ணம்
குமரகுருதாச சுவாமிகள் பாடல் - 1266
ஸ்ரீமத் குமார சுவாமியம் (குமார நாயகன் திருவிளையாடல்) - 1192
திருவலங்கற்றிரட்டு(பல சந்தப் பரிமளம்) - 1135
திருப்பா (திட்ப உரை) - 1101
காசியாத்திரை(வடநாட்டு யாத்திரை அனுபவம்) - 608
சிறு நூற்றிரட்டு (சண்முக கவசம் முதலிய பத்து) - 258
சீவயாதனா வியாசம் (சீவகாருண்யம் - புலால் மறுப்பு) - 235
பரிபூரணானந்த போதம் (சிவசூரியப் பிரகாசம் உரை) - 230
செக்கர் வேள் செம்மாப்பு - 198
செக்கர் வேள் இறுமாப்பு - 64
தகராலய ரகசியம் (சதானந்த சாகர உரை)- 117
குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி - 100
சேந்தன் செந்தமிழ் (வடமொழி கலவாத் தனித் தமிழ்)- 50
குமாரஸ்தவம் 44
தென்னாட்டுத் திருத்தலதரிசனம் (கட்டளைக் கலித்துறை) 35
பத்துப் பிரபந்தம் (சித்திரக் கவிகள்) 30
ஆனந்தக்களிப்பு 30
சமாதான சங்கீதம் 1
சண்முக சகச்சிர நாமார்ச்சனை 2.

ஆகப் மொத்தம்பாடல்கள் 6666 பாடியுள்ளார்.

Saturday 21 October 2017

பத்திரிகையாளன் பார்வையில் தேவர்

மீண்டும் நினைவில் இந்த நாள்..4.4.2008..!

தினத்தந்தி, கதிரவன், தினபூமி, தினமலர்,தினகரன்-தமிழ்முரசு என பல நாளிதழ்களில் ஏரியா நிருபராக, செய்தியாளராக, பகுதி பொறுப்பாளராக , சீனியர் நிருபராக பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகு திரைத்துறையில் கால் பதிக்க முடிவு செய்தேன்.
பத்திரிகையாளன் என்ற அடையாளத்தோடு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாற்றை எ ந்த கலப்பும் இல்லாமல் பின் வரும் தமிழ் மக்களுக்கும், உலக தமிழர்களுக்கும் சொல்ல முடிவு செய்தேன்.
அது ஏன் இவரை பற்றி...

கேள்விகள் தோன்றலாம். பொதுவாகவே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரில் வாழ்க்கை நடத்தும் அரசியல் கட்சிகளோ அல்லது தனிமனித அமைப்புகளோ அவர் நாட்டுக்கு என்ன செய்தார் என்பதை சொல்ல மறந்து அல்லது மறைத்து ஒரு சாராருக்கு மட்டுமே அவர் சொந்தம் என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
அது போன்ற சூழலில் அவரது நூறாவது ஜெயந்தி தினம் வந்தது.
அதை கொண்டாடும் விதமாக என் நண்பரும்,தயாரிப்பாளருமான கார்த்திக் உதவியுடன் சத்தமில்லாமல் "பசும்பொன் தேவர் வரலாறு" தொடங்கினேன்.
வரலாறு சொல்லவேண்டும் என்பதால் பிழைகள் வராமல் மிக மிக கவனத்துடன் களத்தில் ஓடினோம்.
அப்போது என் நண்பரும் செய்தியாளருமான கதிரவன் மூலமாக மரியாதைக்குரிய திரு.நவமணி அவர்களின் நட்பு கிடைத்தது.
இ ந்த வரலாற்று ஆவண படம் முழுமை பெற்றது இவரால் தான்.
ஆவண படம் என்பதால் நிஜங்கள் தேடி ஊர் ஊராக போனோம்.
மறைக்கப்பட்ட பல வரலாறு கள் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கின.
சுமார் 10 மாதங்கள் ஆதார ஆவணங்கள் திரட்டிய பிறகு "பசும்பொன் தேவர் வரலாறு" முழுமை பெற்றது.
இப்போதைய இயக்குனர் ஜீவாசங்கர் ஒளிப்பதிவில், யுகபாரதி பாடலில்,இப்போதைய நடிகர், தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி இசையில் உருவானது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்த வாழ்கை வரலாறு தணிக்கை துறையால் பல கட்டங்கள் கவனமாக பார்க்கப்பட்டு "யு" சான்று வழங்கப்பட்டது.

அதற்கு முன்பு இணையத்தில் முத்துராமலிங்க தேவர் என்றோ, பசும்பொன் தேவர் என்றோ எ ந்த வார்த்தைகள் போட்டு தேடினாலும் "தேவர் மகன்" படத்தின் தகவல்களும், கமல்ஹாசன், சிவாஜி கணேசன் அவர்களின் படங்களும் தான் வரும்.
ஆனால்...
எங்களின் "பசும்பொன் தேவர் வரலாறு" படத்திற்கு பிறகு இப்போது இணையத்தில் எங்கு தேடினாலும் பல ஆயிரம் பக்கங்களில் எங்கள் உழைப்பு .

அதோடு மட்டுமல்லாமல் உலக சினிமா வரலாற்றில் ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்று ஆவண படம் வணிக ரீதியாக திரையரங்குகளில் வெளியான முதல் ஆவண படம் என்ற பெருமையும் "பசும்பொன் தேவர் வரலாறு" பெற்றது.

இப்படி சாதனை படைத்த ஆவண படத்தை முழுமையான திரைப்படம் ஆக எடுக்க அவர் பெயரை,படத்தை பயன் படுத்தும் யாரும் முன் வராமல் இருப்பது வேதனையான உண்மை.

இன்னும் நிறைய உண்டு... நேரம் வரும் போது பதிவிடுவேன்.

என்றும் அன்புடன்
இயக்குநர் ஆபிரகாம் லிங்கன்