Wednesday, 11 October 2017

ஐயா

1950களில் ஐப்பசிமாதம் எங்கள் பகுதியில்  ஐந்துநாட்கள் அடைமழை பெய்தது எங்கள் கிராமத்திற்கு அருகே அமைந்துள்ள கண்மாய் நிரம்பிவழிந்து ஒடியது இதனால் கரைகளில் உடைப்பு ஏற்படும் அபாயகரமான சூழல் அவ்வாறு கண்மாய் உடைந்து தண்ணீர் வெளியேறினால் எங்கள் ஊரே அழிந்துபோகும் இதனால் பதபதைத்து செய்வதறியாது குழந்தை குட்டிகளுடன் இரவில் அஞ்சிநடுங்கி்கொண்டிருந்தோம்

இத்தகவலை அறிந்து புளிச்சிகுளத்தில் இருந்த எங்கள் ஐயா இரவோடு இரவாக கொட்டும் மழையில் எங்கள் ஊருக்கு வந்து நிலைமையை கண்டுகொண்டு பக்கத்து கிராமத்து மக்களை மண்வெட்டி கூடைகளுடன் வரச்சொல்லி தகவல் அனும்பினார்கள் ஓருமணி நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இரவுநேரத்தில் அங்கு குவிந்தார்கள். தீவட்டி வெளிச்சத்தில் வேட்டியை மடித்துகட்டி எங்கள் ஐயா மண்வெட்டியில் மண்ணை வெட்ட ஒட்டுமொத்த சனமும் விடிய விடிய மண்ணை வெட்டி சுமந்து கரையை உயர்த்தி அழிய இருந்த எங்கள் ஊரையும் உடைமைகளையும் உயிர்களையும் காத்தார்கள்..

-சிட்டவண்ணான்குளம் தாழ்த்தப்பட்ட சமூக பெரியவர் சோலைக்குடும்பன்.அவர் உச்சரித்த அவர்களது ஐயா
#பசும்பொன்தேவர்

No comments:

Post a Comment