Wednesday, 18 October 2017

ஜூலை 17

""""""""""""""""""""""""""#ஜூலை_17""""""""""""""""""""""""
        ஸ்ரீவில்லிப்புத்தூர் MPயாக பசும்பொன் தேவர் பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்ற நாள்.

செப்-9 ல் திரும்பிய தேவர், செப்டம்பர் 10 ஆம் நாள் மாவட்ட ஆட்சியர் அழைப்பில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் சசிவர்ண தேவர், மற்றும்
வேலுவுடன் (பார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்த தலித் சமூகத்தினை சார்ந்த தலைவர்)
முத்துராமலிங்க தேவரும் கலந்து கொண்டார்.

மறுநாள் செப்-11 பரமக்குடியில் இம்மானுவேல் என்கிற காங்கிரஸ் கட்சி உறுப்பினர் துரதிஷ்டவசமாக கொல்லப்பட்டார். அதனால் சிறு கலவரம் உண்டானது. இருநாள் கழித்து செப்-14ல் காவல்துறை மூலம் கீழத்தூவல் கிராமத்தில் 5பார்வர்ட் பிளாக் தொண்டர்களை கண்ணைகட்டி சுட்டது காங்கிரஸ் அரசு. அதன் பின்  பெரிய கலவரமாக உருவெடுத்தது. பின்பு சில நாளில் கட்டுபடுத்தப்பட்டது. இந்த நிலையில் செப்டெம்பர் 28 ஆம் நாள் தேவர் அவர்கள் பாதுகாப்பு சட்டத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இந்த பாதுகாப்பு சட்ட வழக்கு, இம்மானுவேல் சேகரன் கொலையில் தேவர் அவர்கள் சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கொலை வழக்காக மாற்றப்பட்டது. பின்னர் புதுகோட்டை நீதிமன்றத்தில் இந்த
வழக்கு வழக்காடபட்டது.
பார்வர்ட் பிளாக் கட்சி தேவர் மீதான இந்த வழக்கு அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தேவர் மீது போடப்பட்டது என்று கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த பொய் வழக்கை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவந்தது.பின்னர் #இந்த_வழக்கின்_முடிவில்_தேவர்_இந்த #வழக்கில்_சம்மந்த_பட்டிருப்பாரோ_என்று #சந்தேகிக்க_கூட_இடமில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு. தேவரை நிரபராதி என்று இந்த வழக்கில் இருந்து சனவரி 1959ல் விடுவித்தது நீதிமன்றம்.

No comments:

Post a Comment