இருவரும் அவதரித்தது தனுசு ராசி மூலம் நட்சத்திரம்.. இருவரும் வெண்கலக் குரலில் பேசுபவர்கள்..
அசுபதி, மகம், மூலம் ஆகிய மூன்றும் ஞானகாரகன் கேது பகவானுடைய நட்சத்திரம்..
இதில் மூலம் நட்சத்திரம் கொண்ட தனுசு ராசி காலபுருஷனின் ஒன்பதாம் வீடாக பரிணமிப்பதால் தர்மத்தின் கோணத்தில் தர்மத்தை பறைசாற்றுகின்ற இடமாக விளங்குவதால் ஹோமத்தின் நெருப்பாக பரிணமிக்கிறது. ஹோமம் என்றாலே புனிதம் என்பதை உணர்த்தும். புனிதம் என்ற சொல்லில் உலகில் உள்ள அனைத்து மேன்மைகளும், நன்மைகளும் அடங்கி உள்ளது..
அக்னி தத்துவத்தில் அருநிலை, கருநிலை, திருநிலை என்கின்ற மூன்று நிலைகளில் திருநிலையை அள்ளிக் கொடுக்கும் அற்புத கேந்திரம் தான் தனூர் மண்டலமாகும். இந்த அக்னி தான் உடலில் உள்ள ஜுவ அக்னியை மூலாக்கினி, ஞானாக்கினியையும் யோக சாதனைகளாலும், தவ ஆற்றலாலும் அறிந்து கொள்ளப் பயன்படுகிறது.. இதன் விளைவில் அஷ்ட சித்தர்களும், ஆன்மீக வள்ளலார்களும் தனூர் மண்டலத்தில் தோன்றினார்கள்..
அத்திரி மஹரிஷிக்கும் அனுஷியா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் பதஞ்சலி மாமுனிவர்.. அந்த ஆதிஷேடனின் அவதாரம் இவர்..
பிரபல யோகக் கலைகளை முறையாக வகுத்துத் தந்தவர் பதஞ்சலி மாமுனிவர்..
அதில் ஒன்று தான் விந்து கட்டுதல்..
இப்பயிற்சியை தான் தெய்வீகத் திருமகனார் அவர்தன் வாழ்நாளில் மேற்கொண்டார்..
பதஞ்சலி_மாமுனிவர்_நாமம்_போற்றி..
பசும்பொன்_தேவர்_நாமம்_போற்றி..
No comments:
Post a Comment