Wednesday, 18 October 2017

தேவர் மேடைமுழக்கம் சிறு குறிப்பு

பசும்பொன் தேவரின்  மேடை முழக்கம்

(சிறு குறிப்பு)
* முதல் முழக்கம் 1933 சாயல்குடி "விவேகானந்தர் வாசகசாலை " ஆண்டு விழாவில் மூன்று மணி நேரம் விவேகானந்தர் தனித்தகுதிகளை விளக்கினார்

*1934 கைரேகைச் சட்டத்தை எதிர்த்து பல இடங்களில் ஆங்கிலேயனை எதிர்த்து முழக்கம்

* பிரிட்டிஷ் அரசுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த வீர சவர்க்கார். திருநெல்வேலி முழக்கத்தை முடித்து மதுரை வந்தார். அந்த மேடையில் தேவர் ஆங்கிலேயனை எதிர்த்து முழங்கினார் .

* 1936 வெளிநாடு பயணம் பர்மா தமிழர்கள் அழைப்பை ஏற்று தலைமை டாக்டர் பாமோ . பர்மாவில் ஒன்பது இடங்களில் தொடர்ந்து முழக்கம்.

*1937 பிரிட்டிஸ் அரசாங்கம் தேவர் அரசியல் மேடைகளில் பேசக்கூடாது என்று வாய்பூட்டுச்சட்டம் போட்டது . அதையும் மீறி மதுரை, திருநெல்வேலி, தென்தமிழகம் பகுதியில் காங்கிரஷ் வெற்றிக்காக முழக்கம்.

*மாபெரும் அரசியல் தலைவர் சத்தியமூர்த்தி ஐயர் அவர்களை கானாடுகாத்தான் மேடையில் துப்பாக்கியால் மிரட்டினார்கள் ஆங்கிலேயன் காவலர் . விசயம் தெரிந்து தேவர் அதை மேடையில் அந்த காவலருக்கு நெஞ்சில் உரமிருந்தால் இந்த மேடைக்கு வரவும் என்று முழங்கினார் . காவலர் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்தார்.

*1937 காமராசர் சௌந்தரபாண்டிய நாடாரால் கடத்தப்பட்டார் அன்று இரவு விருதுநகர் தேசபந்து மைதானத்தில் காங்கிரஷ் கூட்டத்தில் பேசிய தேவருக்கு செய்தி வருகிறது அதை மேடையில் . காமராசர் ஏழைத்தொண்டன் மீது ஒரு துரும்பு படுமானால், கடத்தியவர்கள் நிம்மதியாக நடமாட முடியாது. என்று தேவர் முழங்கியதும் கூட்டம் முடிந்ததும் காமராசர் விடுவிக்கப்பட்டார்.

*1938,1939 பசும்பொன் தேவர் தொழிலாளர் மத்தியில் சங்கத்தலைவராக பல முழக்கங்கள்.

*விவசாயிக்காக ஜமீன்தார் ஒளிப்பு மாநாடு நடத்திக் காட்டினார் பசும்பொன் தேவர் . இந்த மாநாட்டுக்காக விவசாயிகளின் பிரச்சனைகளை விரிவாக முழங்கினார்.

* 1939 நேதாஜி வெற்றிக்காக காங்கிரஷ் இயக்கத்தின் தோல்விக்காக தேவர் பல இடங்களில் முழங்கினார் . காங்கிரஷ் பெரும் தலைவர்கள் காந்திஜி, வல்லபாய் படேல், இராஜாஜி நேதாஜிக்கு எதிராக தமிழகத்தில் அவர்கள் முழங்கினர் ஆனால் தேவர் ஆதரித்த நேதாஜி வெற்றி பெற்றார்.

* 1939 நேதாஜி அவர்களை மதுரைக்கு தேவர் அழைத்து வந்தார் பல லட்சம் மக்களை திரட்டிய தேவரின் செல்வாக்கை கண்டு நோதாஜி வியந்தார் . நேதாஜி முன்னிலையில் தேவர் முழங்கினார்.

(1942 முதல் 1947 வரை தேவரை தடையே மீறியதற்காக சிறை பிடித்தனர் ஆங்கிலேயர் 5 ஆண்டுகள்)

*1949 நேதாஜி பிறந்தநாள் ஜனவரி 23 ஆம் நாள் . இரவு ஏழமணிக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு பசும்பொன் தேவர் மேடை முழக்கத்தை காண மூன்று லட்சம் மக்கள் மதுரை தமுக்கம் மைதானத்தில் காத்திருந்தினர் தேவர் முழக்கம் 1.30 மணி நேரம் முழக்கம் தொடர்ந்தது.

*1949 மதுரை சௌராஷ்டிரா பள்ளியில் "தமிழ் மறை-குறளின் நெறி " இதற்கு தலைமை ஏற்று பசும்பொன் தேவர் திருக்குறளை பற்றி முழங்கி அனைவரையும் வியக்க வைத்தார்,

*வள்ளலார் பாடலை தரமறுத்த வள்ளலார் உறவினர் முன்னிலையில் வள்ளலார் எழதிய ஒன்பது பாடலையும் பாடி தேவர் உறவினரை கண்ணீர் விட்டு காலில் விழம்படி செய்தார் .

*1949 ஏப்ரல் 24 _பாரத இளைஞர் சங்கத்தை தலைமை தாங்கி இளைஞர்கள் மத்தியில் காரக்குடியில் முழங்கினார்

*1949 ஜுன் 12 மதுரை வெள்ளியம்பல மண்டபத்தில் "தமிழ்நாடு சன்மார்க்கத் தொண்டர் " தலைமை ஏற்று தேவர் முழங்கினார்.

* 1949 ஜுன் 29 மதுரை கிருஷ்ணராயர் தெப்பகுள மைதானத்தில் "தமிழ்நாடு முன்னேற்றக் கட்சி" பொதுகூட்டத்தில் பசும்பொன் தேவர் முழக்கம்.

*மகபாரதமும் இராமாயணமும் மக்களுக்குச் சொல்லும் செய்தியே இராஜாஜி முன்னிலையில் மதுரையில் முழக்கம்

*1952 முதல் 1956 வரை தேவர் மாகாண சட்டசபையில் பசும்பொன் தேவர் நிகழ்த்திய பதிமூன்று முழக்கம்

*1955 பர்மா இரண்டாவது பயணம் ஆன்மீகம், அரசியல் முழக்கம்

*பர்மா பயணம் முடிந்து தாயகம் திரும்பும் போது கல்கத்தாவில் நடந்த பொதுகூட்டத்தில் தேவரின் முழக்கம்.

*நெல்லை மாவட்டம் வடக்கங்குளம் ஆறுமுக நாவலர் நடத்திய விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தில் தேவரின் முழக்கம்

*தருமபுரம் ஆதினம் நடத்திய தமிழ்ச்சங்கத்தில் தேவரின் முழக்கம்
ஆடுதுறை பாண்டியனின் 'கட்டபொம்மன்' நாடகத்திற்குத் தலைமையேற்று பசும்பொன் தேவர் முழக்கம்

* சிதம்பரம் பள்ளி ஒன்றில் 'சிவம்' என்ற தலைப்பில் பசும்பொன் தேவரின் முழக்கம்.

*திருச்செந்தூர், கன்னியாகுமரியில் நிகழ்த்திய பசும்பொன் தேவரின் முழக்கம்

*1957 செப் 28ல் மதுரை தமுக்கம் மைதானத்தில் "இந்திய தேசிய ஜனநாயக காங்கிரஷ் மாநாடு " ஆதிகாலம் போராட்டம் முதல் காங்கிரஷின் வெறி ஆட்டம் வரை தேவர் முழங்கியது (YOUTUBE THEVAR SPEECH)

*1959 ஜனவரி 8 . சென்னைக் கடற்கரையில் ஐனநாயக காங்கிரஷ் நடத்தும் பொதுகூட்டமஇருதியில் தேவரது வார்த்தைகள் காங்கிரஷ் அழிவுகாலம் நோக்கி அணிவகுப்பு.

* நாடாளுமன்றக் கூட்டம் முடிந்ததும் 1959 கல்கத்தா பயணம். கல்கத்தா பொதுக்கூட்டத்தில் இரண்டு மணிநேரம் ஆங்கிலத்தில் பசும்பொன் தேவர் முழக்கம்.

*1959 மே 25 மும்பாய் நிப்போ கார்டன் .,. இரவு ஏழமணி , 'தேசியமும் தெய்வீகமும் ' என்ற தலைப்பில் பசும்பொன் தேவரின் முழக்கம்.

*1959 அக்டோபர் 10 ல் பொள்ளாச்சி ஸ்ரீ குடலுருவி மாரியம்மன் கோவில் 12 -வது நவராத்திரி ஆண்டு விழாவில் 'சக்தி, என்ற தலைப்பில் பசும்பொன் தேவர் முழக்கம்.
அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் இடைத்தேர்தல் ஏழநிமிட முழக்கம் ஏழாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தேவரது ஆதரவாளர் வெற்றி.

இறுதி முழக்கம் 1962 மதுரை தமுக்கம் மைதானத்தில் . அலைகடல் போல மக்கள் கூட்டம் . மேடையில் பசும்பொன் தேவரும், இராஜாஜியும் , சிறைக் கொடுமையினால் உடல் தேவருக்கு பாதிப்பு . மணிக்கணக்கில் பேசிய அந்த நாவுக்கு இன்று ஏதோ ஒர் சோர்வு.

பசும்பொன் தேவர் பேசதொடங்கினார் . கம்பீரமான தோற்றம், சிங்கத்தின் கர்ஜனை போன்ற மேடை முழக்கம் ... இத்தனையும் இருந்தது ...

இருப்பினும் பசும்பொன் தேவர் உட்கார்ந்து கொண்டு பேசியது கூடியிருந்த பலரைக் கவலைக்குள்ளாக்கியது ..... அது "எப்படியிருந்த தேகம் இப்படி ஆகிவிட்டதை? இல்லையில்லை ஆளுவோர் ஆக்கிவிட்டார்களே "
என்ற ஆதங்கம் கூடியிருந்த மனக் குகையில் ... (YOUTUBE THEVAR LAST SPEECH)

எதிரிகளைக் குலைநடுங்க வைத்த மேடை முழக்கம் இதோடு முடிந்தது.....

(இவர் இத்தனை முழக்கத்தில் ஜாதி பற்றி பேசியதே இல்லை)

என்றும் உங்கள் அன்புடன்
 
            #நெல்லை_எஸ்_மாடசாமித்_தேவர்

No comments:

Post a Comment