""""""""ஸ்ரீசைதன்ய சுவாமி சித்தர்"""""""
தேவரை பொய்யான வழக்கில் காங்கிரஸ் அரசு சிறையில் அடைத்தது . ஆனால் நீதிமன்றம் தேவரை தூயவர் என விடுதலை செய்தது. விடுதலை ஆனதும் தேவர் அன்று இரவு 8 மணிக்கு ஆடுதுறைக்குப் புறப்பட்டார். அங்கு தேவரின் குடும்ப குருநாதரான ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகள் சமாதியில் அஞ்சலி செலுத்தி வணங்கினார். ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகள், தேவர் விடுதலை ஆவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, புதுக்கோட்டை சிறைக்கு வந்து தேவரைப் பார்த்தார். அப்போது தேவர் சுவாமிகளைப் பார்த்து, "சுவாமி உங்களைப் போன்ற மகான்களின் பாதம் சிறையிலே படலாமா?" என்று கேட்டார். அதற்கு சுவாமிகள், "உங்களைப் பார்க்க வேண்டும் என்று எண்ணினேன். நீங்கள் விடுதலை ஆவீர்கள். ஆனால், அப்போது நான் இருக்க மாட்டேன். அதனால் தான் இப்போது வந்தேன்" என்று கூறினார். பிறகு, சுவாமிகள் முன்னரே தான் குறிப்பிட்ட தேதியில் ஆடுதுறைக்கு அருகிலுள்ள காவிரி ஆற்றங்கரைக்கு மேற்கே ஓரிடத்தை தேர்வு செய்து, அந்த இடத்தை தன் பக்தரான செட்டியார் ஒருவரிடம் சொல்லி அதை வாங்க சொன்னார். பிறகு சொன்னது போலவே 7-9-1958ம் தேதியில் அங்கே அமர்ந்து சுவாமிகள் ஜீவசமாதி ஆனார். பின்னர் சுவாமி சொன்னது போலவே விடுதலை ஆன தேவர், அன்றே ஆடுதுறைக்குப் போய் சுவாமிகளின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார் தேவர்.
அப்பேர் பட்ட புனிதமான இடத்திற்கு செல்ல இன்று 19-11-2017ல் வாய்ப்பு ஏற்படித்திக்கொண்டு சென்று தேவர் வணங்கிய அந்த மகான் சன்னிதியில் நான் வணங்கினேன்.
படம்: ஸ்ரீசைதன்ய சுவாமியுடன் பசும்பொன் தேவர் அவர்கள். நான் இன்று சுவாமிகள் சன்னதில் எடுத்த படங்கள்.
செல்லும் வழி:
தஞ்சை மாவட்டம் ஆடுதுறையிலிருந்து சூரியனார்கோவில் செல்லும் சாலையில் அரை மைல் தொலைவில் காவிரியாற்றின் மேம்பாலம் ஒன்றுள்ளது. அதற்கு முன்பாகவே இடபக்கமுள்ள அம்மன் கோவிலின் பின்புறமுள்ள தோப்பில் ஸ்ரீசைதன்ய விநாயகர் கோவில் உள்ளது. அந்த கோவிலிலுள்ள விநாயகர் சிலைக்கு கீழாகவே ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகளின் ஜீவசமாதி துடிப்புடன் இருந்து வருகின்றது.
(கூடுதல் தகவல்- சாமிநாதன் செட்டியார் காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் அவரது இல்லத்தில் தான் சைதன்ய சுவாமிகள் இருந்தார். சாமிநாதன் செட்டியாரின் பேரன் ஆடுதுறை யில் ரெடிமேட் கடைவைத்துள்ளார்.ஆப்ரஹாம் லிங்கன் இயக்கத்தில் உருவான பசும்பொன்தேவர் வரலாறு ஆவணப்பட படப்பிடிப்பு இரவு சுமார் 9 மணியளவில் நடத்தினோம்.- நவமணி ஐயா)
வணக்கம் ஐயா, தங்கள் தொடர்பு எண் கிடைக்குமா? மிக்க நன்றி
ReplyDelete