நண்பர்களே!
தேவர் பற்றிய பதிவுகள் செய்வது தேவருடைய அரசியலைப் புரிந்து கொள்வதற்கான ஒரு முயற்சி. தேவர் செய்த அரசியல் வேறு. இன்று தேவர் சாதியினர் செய்யும் அரசியல் வேறு. தேவரை நாம் போற்றுகிறோம் என்றால் சாதியின் அடிப்படையில் அல்ல. அவர் ஏற்ற கொள்கையின் அடிப்படையில் மட்டுமே!
♦பசும்பொன் தேவர் அவர்கள் அமெரிக்க பிரித்தானிய வல்லாதிக்க எதிா்ப்புக் கொள்கையில் மிக உறுதியாக இருந்தார்.
♦சோசலிச சமூக பொருளியல் அமைப்பிற்கான செயல் திட்டங்களின் அடிப்படையில் இயக்கம் நடத்தினார்.
♦சாதி ஏற்றத்தாழ்வை எதிர்த்தார். அனைத்து சமூக மக்களுக்காக உழைத்தார்.
♦அடக்கு முறைகளுக்கு அஞ்சாமல் தேசத்திற்குப் பாடுபட்டார்.
♦"அதிகாரம் அனைத்தும் மக்களுக்கே " என்ற உயரிய இலட்சிய நோக்குடன் இயக்கம் நடத்தினார்.
♦ஆட்சியாளர்களின் அநீதிகளுக்கு எதிராக எத்துணை இடர்பாடுகள் வந்தாலும் இடையறாது போராடினார்.
♦தன்னுடைய சொத்துகளை அனைவருக்கும் இலவசமாகப் பகிர்ந்தளித்தார்.
♦ஊழல் பெருச்சாளிகளோடும் மக்கள் சொத்தை சுரண்டிக் கொழுப்பவர்களோடும் எந்த காலத்திலும் அரசியல் உறவு கொண்டதில்லை.
♦மதவாத அரசியலை அடியோடு நிராகரித்தோர். அரசியல் வேறு, ஆன்மிகம் வேறு என்ற தெளிந்த சிந்தையோடு இருந்தார்.
♦தமிழ் மொழியை மிகவும் நேசித்தார். தமிழ்ப் பண்பாட்டின் சின்னமாகத் திகழ்ந்தார்.
இந்த இலட்சியங்களோடு தான் தேவர் புகழ் பாடும் இயக்கங்கள் செயலாற்றுகின்றனவா?
இந்தக் கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி தான் தேவரைப் பின்பற்றுவதாகக் கூறும் நண்பர்கள் செயல்படுகின்றார்களா?
தோழா்களே!
நமது இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன. நமது வேளாண்மை, கல்வி, மருத்துவம், பண்பாடு, வாழ்வியல் அனைத்தும் வல்லாதிக்கத்தாலும் கொடு நெறி அரசியலாளர்களாலும் சூறையாடப்படும் போது வேடிக்கைப் பார்ப்பவர்கள் எப்படி தேவரின் வாரிசுகளாக இருக்க முடியும்!
தேவரின் மக்கட் சார்பு அரசியலை முன்னெடுப்போம்!
No comments:
Post a Comment