Sunday, 19 November 2017

காக்கும் கடவுள் பசும்பொன் தேவரைய்யா

.''''''''''''காக்கும் கடவுள் பசும்பொன்'''''''''''''' ''''''''''''''''''''''''''''#தேவரைய்யா ''''''''''''''''''''''''''''

இன்றைக்கு நினைத்தாலும் மெய் சிலிர்க்கும் நினைவுகள்... பசும்பொன் தேவர் வரலாறு என்ற பெயரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகானின் வாழ்க்கையில் முக்கிய இடம் பெற்ற சைதன்ய சுவாமிகள் ஜீவ சமாதி இடத்தில் காட்சிகளை பதிவு செய்ய புறப்பட்டோம்.
ஆடுதுறைக்கு நாங்கள் போய் சேரும் போது இரவு 8 மணியை தாண்டி விட்டது.
காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது என்று சிலரிடம் வழி கேட்டோம்.  அதில் அவர்கள் சொன்னதை வைத்து ஒரு இடத்தை அடைந்தோம்... ஓங்கி வளர்ந்த பெரிய வேப்பமரம்... அதன் அடியில் சிதலமடைந்த நிலையில் ஒரு மேடை... அதில் ஒரு விநாயகர் சிலை சின்னதாய்... சுற்றிலும் கும் இருட்டு... புதர்கள்... அமானுஷய சூழல்... பயம் கண்டிப்பாக தோன்றும்... ஆனால் எங்கள் குழுவில் இருந்த யாருக்கும் அப்படி எந்த உணர்வும் இல்லை... எங்கள் நோக்கம் இரவுக்குள் சுவாமிகளின் நினைவிடத்தில் காட்சிகளை எடுத்து விட்டு விடிவதற்குள் மதுரை செல்ல வேண்டும் என்பதுதான்...
எந்த பய உணர்ச்சி இல்லாமல் ஓங்கி வளர்ந்த புதர்களை கைகளிளேயே விலக்கி நாங்கள் பயணம் செய்த காரின் முன் விளக்குகளின் வெளிச்சத்தை அந்த இடத்தில் செலுத்தி படமாக்க முயன்ற போது... தூரத்தில் யாரோ ஒருவர்.... "யாருப்பா அது.... இடுகாட்டில் ராத்திரி நேரத்தில்... மொதல்ல அங்க இருந்து வெளிய வாங்க" என சத்தம் வர.... அப்போது தான் எங்களுக்கு தெரிந்தது நாங்கள் நிற்கும் இடம் இடுகாடு என்று...
அப்போது நேரம் இரவு 9ஐ தாண்டியது...
சத்தம் போட்டு அழைத்தவரிடம் போய் சுவாமிகள் நினைவிடம் கேட்டதும் நாங்கள் தேடிய இடத்திற்கு எதிர் திசையில் சுற்றிலும் தடுப்பு அதற்குள் ஜீவசமாதி இருந்தது...
அதற்குள் அந்த இடத்தை பராமரிப்பவர் அங்கு வந்து சேர்ந்தார்.
அப்போது தான் எங்களை அங்கு அழைத்து வந்தவர் ஒரு விஷயத்தை சொல்ல.... அதைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சியில் ரத்தம் உறைந்தோம்...
ஜீவ சமாதி இடத்தை தேடி முதலில் நாங்கள் போன இடம் ஒரு இடுகாடு... அதோடு அந்த இடத்தில் மாலை 5 மணியை தாண்டி விட்டாலே மனித நடமாட்டம் இருக்காதாம்... காரணம் அந்த இடத்தில் நிறைந்து காணப்படும் புதர்களில் ஆளுயர விஷப் பாம்புகள் அதிகம் இருக்கிறதாம்...
தீண்டினாலே அடுத்த நொடி மரணத்தை தரும் விஷ ஜந்துக்கள் அதிகம் இருக்கும் அந்த இடத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் வெறும் கால்களிலும், கைகளில் புதர்களை விலக்கியும் எங்கள் பணியை செய்து கொண்டிருந்தோம்.

ஆனால்.... உள்ளூர் மக்கள் மதிய நேரங்களில் மாலை நேரங்களில் கூட செல்ல அச்சப்படும் இடத்தில் விஷ ஜந்துக்கள் மத்தியில் என்னையும் எனது குழுவினரையும் எங்களின் ஆலோசகர் மரியாதைக்குரிய நவமணி ஐயா அவர்களையும் காத்து... விஷ ஜந்துக்கள் வாய்களை கட்டி... அங்கிருந்து நாங்கள் பத்திரமாக திரும்பவும், ஜீவசமாதி அமைந்துள்ள இடத்தில் நள்ளிரவில் பத்திரமாக படப்பிடிப்பு நடத்தி மதுரை வந்து சேர்ந்தோம். அதுவரை எங்கள் குழுவை பாதுகாத்தது பசும்பொன் தேவர் திருமகானின் ஆசி என்றால் அது மிகையாகாது.

வரலாறுகள் எப்போதும் நெஞ்சில் நிலைத்து நிற்கும். இப்படி ஒரு அனுபவம்... கோடான கோடிபேரின் தெய்வமாக திகழும் தேவர் திருமகனாரின் வாழ்க்கை வரலாற்றில் என்னையும் இணைத்த என் மதிப்பு மிகு நவமணி ஐயா அவர்களுக்கு வாழ்க்கை முழுதும் நன்றிகள் சொல்ல கடமை பட்டிருக்கிறேன் - ஆபிரகாம் லிங்கன்
ஆவணப்பட இயக்குனர்
பசும்பொன் தேவர் வரலாறு.

ஸ்ரீசைதன்ய சுவாமி சித்தர் ஜீவசமாதி படம்(சடையாண்டி)

No comments:

Post a Comment