அகில இந்திய பார்வர்ட் பிளாக் என்ற இயக்கம் தற்போது பலரின் பார்வையில் சாதாரண இயக்கமாக தோன்றலாம். ஏன் தமிழகத்தில் மாசற்ற மாணிங்கம் பசும்பொன் தேவரைய்யாவை சாதியவாதியாக மாற்றும் முயற்சியில் சாதி கட்சியாக பார்ப்பவர்கள் அதிகம். ஆனால் உண்மையில் உலகிலேயே அதிக அடக்குமுறைகளை எதிர்கொண்ட இயக்கமே பார்வர்ட் பிளாக் இயக்கம் தான். 1939ல் உலகின் மிகச்சிறந்த மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் இது. இந்த ஒன்றே போது எவ்வளவு அடக்குமுறைகளை இந்த இயக்கம் எதிர்கொண்டிருக்கும் என புரிந்துகொள்ள. 1942ல் ஆங்கிலேயர்களால் இக்கட்சி தடை செய்யப்பட்டது. இன்று அரசியலில் இருக்கும் ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்ட ஒரே கட்சி இது மட்டும் தான். இயக்கத்தின் தலைவர் நேதாஜியை போர் குற்றவாளியாக அறிவித்து இந்தியாவிற்குள் வர முடியாத துயரத்திற்கு ஆளாக செய்தது ஆங்கிலேய அரசு. இக்கட்சியின் தமிழக தலைவராக நேதாஜியால் சென்னை பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவரை ஆங்கிலேயர்கள் தொடர்ந்து சிறையிலேயே அடைத்து வைத்தனர். இந்த கொடுமை எல்லாம் ஆங்கிலேயர்களோடு முடிந்து விடவில்லை.
நேதாஜிக்கு பிறகு பசும்பொன் தேவர் இக்கட்சிக்கு வலிமை சேர்த்தார். 1952ல் சிங்கம் சின்னத்தில் பார்வர்ட் பிளாக் தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் பசும்பொன் தேவர் மட்டுமே சிங்கம் சின்னத்தில் வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து காங்கிரஸ்க்கு எதிரான கட்சியாக வலிமை பெறச் செய்தார் தேவர். அதை தடுக்க பிரதமர் நேரு ஜீலா பத்ராய என்பவரை பசும்பொன் கிராத்தில் தேவரிடம் சமாதானம் பேச அனுப்பினார். மந்திய மந்திரியாக பதவி தருகிறோம். காங்கிரஸோடு பார்வர்ட் பிளாக்கை இனைந்துவிடுங்கள் என. நேதாஜிக்கு துரோகம் செய்தவர்களோடு இணைய முடியாது என தேவர் மறுத்துவிட்டார். ஆனால் நேரு சூழ்ச்சியில் பார்வர்ட் பிளாக் தலைவர்கள் மோகன் சிங்க் - யாகி ஆகியோரை கொண்டு காங்கிரஸ் இணைந்ததாக அறிவிக்க செய்தார். இதை ஏற்க மறுத்தனர் மற்ற தலைவர்கள். இந்த தருணத்தில் 1955 ஆம் ஆண்டு மே மாதம் 11 முதல் 15 தேதிகளில் பார்வர்ட் ப்ளாக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நாக்பூரில் நடந்தது. இதை சிங்க் - யாகி ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். இதில் ஹேமந்த் குமார் போஸ் அவர்கள் பார்வர்ட் ப்ளாக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஹல்டுல்கர் பொது செயலாளராகவும் பசும்பொன் தேவர் அவர்கள் துணைத் தலைவராகவும் தேர்ந்தேடுக்கபட்டனர் (இந்த பதவியில் தேவர் அவர்கள் இறக்கும் வரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது). தமிழகத்தில் தேவரின் செயல்பாட்ட தடுக்க பொய்குற்றசாட்டில் சிறையில் அடைத்தது காங்கிரஸ் அரசு.நீதிமன்றம் தேவரை குற்றவாளி என சந்தேகிக்க கூட முடியாது என தனது தீர்ப்பில் குறிப்பிட்டு விடுதலை செய்தது. ஆனால் நோயாளியாக. சிறையிலிருந்து வெளிவந்த தேவர் பிரச்சாரத்திற்கு செல்லாமலே தானும் தனது கட்சிகாரர்களையும் வெற்றி பெறச்செய்தார். ஆனாலும் உடல்நல குறைவால் 55வது பிறந்தாள் அன்று இம்மண்ணில் மறைந்தார். தேவர் மறைவுக்கு காரணமான காங்கிரஸ் தேவர் மறைந்த பின் நடந்த முதல் தேர்தலில் ஆட்சியை இழந்தது இன்று வரை அது தொடர்கிறது.
இக்கட்சியின் தற்போதைய தேசிய பொதுச்செயளாலராக தேவப்ரதா பிஸ்வாஸ் அவர்கள் உள்ளார். இவர் 1997ல் இருந்து இப்பதவியில் கட்சி வளர்ச்சி பணிகளை செய்து வருகிறார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராக நான்கு முறை இருந்தவர். 1990 இருந்து தொடர்ச்சியாக MPயாக இருந்து 2008ல் தனது பதவியை ராஜினமா செய்தார். இவருக்கு துணையாக தமிழகத்தை சேர்ந்த டாக்டர் PV.கதிரவன் Ex.MLA தேசிய துணைத்தலைவராக தேர்தெடுக்கப்பட்ட செயல்பட்டு வருகிறார். தமிழகத்தின்பொதுச்செயளாலராகவும் PV.கதிரவன் அவர்கள் உள்ளார். இவர்களின் தலைமை ஏற்று நேதாஜி தேவரின் ஒற்றுமை விசுவாசம் தியாகம் என்ற கொள்கையை ஏற்று மீண்டும் தேசமெங்கும் புலிக்கொடியை பறக்க செய்வோம்.
நாம் இருப்போம் நம் கட்சியில்.
ஜெய்ஹிந்த்
No comments:
Post a Comment