Thursday, 16 November 2017

வட மொழியும்-தென்தமிழும் ஆனவன் காண்"

வடமொழி - தென்மொழி இரண்டும் நம் சொந்த மொழிகள் தான். இதை அடியேன் சாகசத்திற்காகச் சொல்வதல்ல,
சமாதானத்திற்காகச் சொல்வதல்ல, ஒப்புக்காகாச் சொல்வதுமல்ல இப்படிச் சொன்னால் பலன் என்று கருதி பாப்புலாரிட்டிக்காக சொல்லுவதுமல்ல, அந்த முறைக்குப் போவது எனக்குப் பழக்கமும் இல்லை, என் பிறவிக்குணமும் அதுவல்ல. அதிலும் இதை நான் சொல்லவில்லை. நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
  அப்பர் சுவாமிகளை உங்களுக்குத் தெரியும். அவர் ஒரு தெய்வீகத் தமிழர். அவரைப் பற்றி இங்கு யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.  அவர் நமது மொழி பற்றி என்ன சொல்கின்றார் தெரியுமா? சிவபெருமானுக்கு லட்சணம் சொல்கின்றபோது,

"வானவன் காண்- வானவர்க்கும் மேலானான் காண்
வட மொழியும்-தென்தமிழும்
ஆனவன் காண்"
என்கிறார்.-  
                               #பசும்பொன்_தேவர்

No comments:

Post a Comment