Wednesday, 15 November 2017

ஈழத்தமிழர்களுக்காக தேவர்

"பசும்பொன் தேவர் திருமகனார்  ஈழத்தமிழர்களுக்காக அன்றே குரல் கொடுத்தவர்."

இலங்கையில் தமிழர்கள் சிங்களருக்கு இணையாக வாழ விரும்புகிறார்கள். அவ்வாறு வாழ முடியாத போது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிரை தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள் என்று தேவர் தனது கட்டுரையில் எழுதுகிறார்.
அந்தக் கட்டுரை இதோ...

இனம் என்றால் சிங்கள இனமும தமிழ் இனமும் என்று இருந்தால் பிரச்சனைக்கு இடமே இல்லை. மொழி என்று இருந்தால் சிங்கள மொழியும் தமிழ்மொழியும் என்றிருந்தால் சிக்கலே கிடையாது. இது சேன நாயகாவுக்குத் தெரியாத ஒன்றல்ல.

ஆயினும் அந்த நிலைமையை ஏற்படுத்த அவர் மறுக்கிறார். தம்மைப் பதவியில் அமர்த்தியவர்கள் சிங்களவர்களாம். சிங்களத்தை ஆட்சிமொழியாக்கவும சிங்களவர்களைப் பாதுகாக்கவும் தம்மை அவர்கள் தெரிவு செய்தார்களாம். அவர்கள் விருப்பத்துக்கு மாறாக தாம் எதையும செய்ய முடியாது என்று கையை விரிக்கிறார். பாவம் பதவி போய்விடுமே என்ற பயம் பதவி என்ன அவ்வளவு பெரிதா? அப்படி நினைத்தால் அதன் விளைவை அவர் அனுபவித்தே தீர வேண்டும்.

சிங்களவர்களுக்குச் சிங்களம் எப்படியோ அப்படித்தான் தமிழர்களுக்கும் தமிழ் உள்ளது. சிங்களவர்களுக்குத் தமது மேம்பாட்டில் எவ்வளவு அக்கறையுண்டோ அவ்வளவு அக்கறை தமிழர்களுக்கும் தமது மேம்பாட்டில் உண்டு. ஆகவே நாட்டில் ஒற்றுமை வேண்டும், அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகத் தமிழர்கள் இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு. அடிமைகளாக வாழத் தேவையில்லை அடிமைகளாய் உரிமை அற்றவர்களாய் வாழ்வதைவிடச் சுதந்திரப் போராட்டத்தில் குதித்துச் சுத்த வீரர்களாய் மானம் உள்ளத் தமிழர்களாய் மடிவது மேல் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

அன்றே ஈழத்தமிழர்களின் போராட்ட உணர்வை புரிந்து கொண்ட  மாபெரும் தலைவர் பசும்பொன் தேவர்.

கீழே உள்ள புகைப்படம்

1952 இலங்கை ஞவுஞ்சுவே-யின் இலங்கை தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் மாநாடு முடிந்தபின் தேநீர் விருந்தில் பசும்பொன் பெருமகனார் சௌமிய மூர்த்தி தொண்டைமான்.

No comments:

Post a Comment