மதுசிந்துக் கலகம் என்றால் என்ன?
இரண்டு ஆலமரங்கள் இருந்தன. இரண்டு கிளைகளில் ஒரு தேன்ராட்டு இருந்தது. அதிலிருந்து ஒரு துளி தேன் விழுந்தது. அந்த விழுந்த தேனில் ஒரு ஈ உட்கார்ந்தது. அந்த ஈயை மீது ஒரு பூச்சி பாய்ந்தது. அந்த பூச்சியின் மீது ஒரு பல்லி பாய்ந்தது. அங்கே வேட்டைக்கு வந்திருந்த இரண்டு ராஜாக்களுடைய படைகள் இரண்டு ஆலமரத்தின் அடியில் தங்கி இருந்தன. ஒரு பக்கத்திலிருந்த நாய் அந்தப் பல்லி மேல் பாய்ந்தது. மறுபக்கம் இருந்த நாய் இந்த நாயைப் பாய்ந்தது. இரண்டு நாய்க்கும் சண்டை நடந்தது. இந்த நாய்க்காரன் அந்த நாயை அடித்தான். அந்த நாய்க்காரன் அடித்தவனை அடித்தான். இதனால் இரண்டு படைகளுக்கும் போர் உண்டானது. ஆனால் காரணம் யாருக்கும் தெரியாது. இதுதான் "மதுசிந்து கலகம்".
இந்த நிலையில் தான் நம்நாட்டில் சின்னக் காரியத்திற்காக அதிகக் கேவலமான காரியம் நடக்கிறது.
இந்த மாதிரி போர் நடக்காமல் இருக்க இரண்டு மந்திரிகள் வந்து நின்றதும் போர் நிற்கும். ஏன் என்றால் "மந்திரிகழுகு வரும்பொருள் உரைத்தல்" என்றிருந்த மந்திரிகள் .
ஆனால் இன்று உள்ள மந்திரிகள்(அமைச்சர்கள்) வரும்பொருள் சுருட்டல் என்ற நிலை உள்ள மந்திரிகள்- பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்
No comments:
Post a Comment