Thursday 1 August 2024

தமிழக மீனவர்கள் கைது - ஆப்பநாடு மறவர் சங்கம் கண்டனம்

ஆப்பநாடு மறவர் சங்கம் கண்டனம்.
கண்டன அறிக்கை

நேற்றைய தினம் 31.07.2024 ம் தேதி காலை 11.00 மணியளவில் இந்திய கடல் எல்லைக்குள் விசைப்படகில் மீன்பிடிக்கச்சென்ற இராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள்:

1. மூக்கையா 54/24 த/பெ முத்து வழிவிட்டான்

2. முத்துமுனியாண்டி. 57/24 த/பெ ராமலிங்கம்

3. மலைச்சாமி 59/24 த/பெ கருமலையான்

4. ராமச்சந்திரன் 54/24 த/பெ வேலு

ஆகிய நான்கு பேர்களும் சென்ற விசைப்படகை இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலால் நேருக்கு நேராக இடித்து தாக்குதல் நடத்தியதால் சம்பவ இடத்திலேயே மீனவர்களின் விசைப்படகு மூழ்கியதில் மலைச்சாமி த/பெ கருமலையான் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

இராமச்சந்திரன் த/பெ வேலு இதுவரை உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்ற எவ்வித தகவலும் அவரது குடும்பத்தாருக்கு கிடைக்கவில்லை.

மூக்கையா த/பெ முத்துவழிவிட்டான் மற்றும் முத்துமுனியாண்டி. த/பெ ராமலிங்கம் ஆகிய இருவரும் வலுகட்டாயமாக இலங்கை அரசின் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த துயர சம்பவத்தை நிகழ்த்தி 2 மீனவர்களின் உயிரை பறித்த இலங்கை கடற்படையினரின் இத்துயரசம்பவத்தை ஆப்பநாடு மறவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. மேற்படி சம்பவத்தை நடத்திய இலங்கை கடற்படையினரை மத்திய அரசும், மாநில அரசும் கண்டித்து உரிய நடவடிக்கை எடுத்தும் கைது செய்யப்பட்டுள்ள 2 மீனவர்களை எவ்வித கால தாமதமும் இன்றி உடனே விடுதலை செய்ய துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த தாக்குதலில் காணாமல்போன மீனவரை இந்திய கடற்படை உதவியுடன் மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இந்த தாக்குதலில் இறந்து போன மீனவ குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ரூ.50 இலட்சமும், இறந்த மீனவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தமிழக அரசு வழங்க வேண்டும். இதுபோன்ற துயர சம்பவத்தை தொடர்ந்து நிகழ்த்தும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தை மத்திய அரசும், மாநில அரசும் அடக்கி தமிழக மீனவர்களின் பாதுகாப்பினை உறுதிபடுத்த வேண்டும் என ஆப்பநாடு மறவர் சங்கம் வலியுறுத்துகிறது.

இப்படிக்கு
டாக்டர் R.ராம்குமார் (தலைவர்)
ஆப்பநாடு மறவர் சங்கம்

No comments:

Post a Comment