Wednesday 28 August 2024

1957...இராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த சம்பவங்கள் அவலங்கள் ஒரு பார்வை

1957...இராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த சம்பவங்கள் அவலங்கள் ஒரு பார்வை.!? ............................................................... 14/09/1957 செப்டம்பர் 14 கீழத்தூவவில் ஐவர் போலீசாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து கீரந்தை, உளுத்திமடை, மழவராயனேந்தல் என்று பல கிராமங்களிலும் ஜனங்களை போலீசாரால் சுட்டுப் படுகொலை செயப்பட்டனர். இந்தப் படுகொலைகள் அனைத்தும் கருணை மிகு கர்ம வீரர் காமராஜர் நாடார் ஆட்சியிலே தான் நடந்தது . இந்த கலவரத்தில்...!!!??? (மொத்தம் 46 பேர் இரு தரப்பினரும் மாண்டு போனார்கள் அப்போதைய தினமணி நாளிதழ் ஆந்திரமாநிலம் சித்தூரில் இருந்து அச்சடிக்கப்பட்ட நாளிதழில் போடப்பட்டிருந்தது) ஆனால் காமராஜர் நாடார் ஆட்சி யில் சொன்னார்கள் இரு சமுதாய மக்கள் கலவரத்தை அடக்க சென்ற போலீஸ்சாரை அரிவாள் வேல்கம்பு கொண்டு தாக்க வந்தார்கள் தற்காப்புக்காக போலீஸ் 17 பேர்களை சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று காங்கிரஸ் சர்கார் ஏளனமாக பதில் சொன்னது....!!! ஏன் இந்தப் படுகொலை . எதற்காக இந்த மனிதர்களை காக்கை குருவி போல் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒற்றை வரியில் சொல்வதென்றால் இவர்கள் காங்கிரசுக்கு எதிரானவர்கள். காமராஜர் நாடாருக்கு ஓட்டுப்போடாமள் எதிர்த்தவர்கள். இவர்கள் அனைவரும் பார்வர்ட் பிளாக் கட்சியைச் சேர்ந்தவர்கள். 14 பேர் மறவர்கள். இருவர் அகமுடையார். ஒருவர் அரிசன் - குடும்பர். இந்த காங்கிரஸ் சர்கார் பயங்கரவாதத்தைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். முதுகுளத்துார் சமாதான மாநாடு முடிந்த மறுநாள் 1957 செப்.11 ம் நாள் இரவு காங்கிரஸ்காரரான இமானுவேல் கொலை செய்யப்படுகிறார். இதையொட்டி கலவரம் வெடிக்கும் என ஆட்சியாளர்கள் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த காமராஜர் நாடார் கலவரம் நிகழ்த்தப்பட்டால் அதைக் காரணமாக வைத்து பசும்பொன் தேவரை கைது சிறையில் அடைக்கலாம்,என்று காமராஜர் நாடார் அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்தப் படுகொலைக்கும் தேவருக்கும் சம்மந்தம் இல்லை என இமானுவேலின் கூடபிறந்த சகோதரர் துரைராஜ் பிரச்சாரம் செய்து வந்தார். மேலும் இந்த துரைராஜ் 1985 வரை அந்தப் பகுதியின் பார்வோட்பிளாக் கட்சி நிர்வாகியாகவே இமானுவேலின் சகோதரர் துரைராஜ் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இமானுவேலின் மைத்துனர் பாலசந்தர் , அமிர்தம் கிரேசு அம்மையாரின் சகோதரரும் 80கள் வரை பார்வோட்பிளாக் கட்சியில் பணியாற்றிக் கொண்டு தான் இருந்தார். 1957 தேர்தலில் இரட்டை மெம்பர் போட்டியில் வெற்றி பெற்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெற்றியை பொருக்கமுடியாமள். அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் ஒருவர் இரட்டை பதவிகள் செல்லாது என்று திடிர் என்று சட்டம் கொண்டு வந்தார் இந்திய தேர்தல் ஆணையத்தை அலைந்தார் ஜவஹர்லால் நேரு அவர்கள்.ஆணையம் உடன் பட்டு சட்டம் இயற்றினார்கள் அவசரமாக.... தேவர் அவர்கள் MP.பதவியை வைத்து கொண்டு MLA பதவியை ராஜினாமா செய்தார். இடைத்தேர்தல் வந்தது .பார்வோடு பிளாக் வேட்பாளராக சசிவரனத்தேவர் நிருத்தப்பட்டார் ஆனால் எப்பவும் சிங்க சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு யானை சின்னம் ஒதுக்க பட்டது .எவ்வளவோ சின்னத்திற்க்கு போராடியும் தேர்தல் ஆணையம் மருத்துவிட்டது. நாமிநேசன் ஒரு நாள் இருக்கும் போது அன்று மாலை 4 மணிக்கு சுயோட்சை வேட்பாளர் A.சந்திரபால் நாடார் என்பவருக்கு சிங்கசின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.....??? இதை என்ன வென்று சொல்வது...காங்கிரஸ்காரர்கள் பதில் சொல்லமுடியும்மா...!!!??? இந்திய முழுவதும் பத்திரிகைகள் மூலம் தலையங்கமாக எழுதினார்கள் நேருவையும் காமராஜர் நாடார் ஆட்சியை கிழி கிழி என்று கிழித்தார் . தேர்தல் முடிவுகள் வெளியானது தேவர் அவர்கள் வாங்கிய வாக்கை விட அதிக அளவில் வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார் சசிவரனத்தேவர். இந்த வெற்றியை பொருக்கமுடியாமள் நேருவும் காமராஜர் நாடாரும் இணைந்து பதவிக்கும் பணத்துக்கும் ஆசை பட்டு இந்த கேவலமான செயலை செய்தார்கள் என்பதை நம் இரு சமுதாய மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் இந்நிலையில் 1957 செப்டம்பர் 14 -ம் நாள், அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் மதுரைக்கு வந்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் மதுரையில் தங்கியிருந்தார்.உடன் உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் மந்திரி கக்கன் மதுரைக்கு வந்த முதல் நாளே, ஐ.ஜீ மற்றும் மாவட்ட காவல் துறையினர் உட்பட காவல்துறை அதிகாரிகளைக் கலந்து பேசினார்.கேரளா ஆம்முடு போலீஸ் முன் ஏற்பாடுடன் இன்ஸ்பெக்டர் “ரே” என்பவரை கொலை வழக்கை விசாரிக்க போலீஸ் பட்டாளத்தையும் கீழ்த்தூவல் கிராமத்துக்கு அனுப்பி வைத்தனர்.அதன் ஒரு கட்டமாக, 1957 செப்டம்பர் 14ம் நாள் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் கிராமத்திற்குள் புகுந்தனர் காவல் துறையினர். கீழ்த்தூவலுக்குப் போன இன்ஸ்பெக்டர் “ரே” அமைதியாக இருந்த கீழ்த்தூவல் கிராமத்து மக்களை அடித்துத் துன்புறுத்தி, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து, பெண்களையும் வயது வந்தவர்களைத் துன்புறுத்தி, அவர்களைப் பிடித்து ஒரு பள்ளிக் கூடத்தில் அடைத்து வைத்தான். முதுகுளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜ் அய்யர், குறிப்பிட்ட 1. தவசியாண்டி தேவர் , 2.சித்திரைவேலு தேவர், 3.ஜெகநாதன் தேவர், 4.முத்துமணி தேவர், 5.சிவமணி தேவர் என்ற ஐந்து இளைஞர்களை மட்டும் வெளியே இழுத்து வந்தார். அவர்களை ரத்த வெறி பிடித்த இன்ஸ்பெக்டர் “ரே” தன் பரிவாரங்களோடு கிராமத்தை ஒட்டி உள்ள கண்மாய் கரைக்குக் கூட்டிச் சென்றான். அங்கே, கண்மாய்க் கரைக்குள் அழைத்துச் செல்லப்பட்ட அந்த ஐந்து வாலிபர்களின் கைகளையும் கால்களையும் பின்பு கண்களையும் கட்டினார்கள். என்ன நடக்கப்போகிறதோ…? என்று அறியாமல் கைகளும் கால்களும், கண்களையும் கட்டி ஐவரையும் கட்டி வைத்து அந்த கட்டிளம் காளையர்கள் ஐவரும் அச்சத்தோடு திகைத்து நின்ற வேளையில் சுட்டுக் கொன்றான் இன்ஸ்பெக்டர் ரே துப்பாக்கியின் வெடிச்சத்தம் கேட்டு, பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்கள் அனைவரும் பதறித்துடித்துக் கோவெனக் கதறி அழுதனர். என்ன நடந்தது அங்கே…? ரத்த வெறி பிடித்தஇன்ஸ்பெக்டர் “ரே” , அந்த இளைஞர்களின் நெஞ்சில் துப்பாக்கியால் வெறிகொண்டு சுட்டு, அந்த ஐந்து பேருடைய உயிரைப் பலிவாங்கினான்.சுட்டப்பட்ட இந்த ஐவரும் பிணமாக, ரத்த வெள்ளத்தில் விழுந்த பின்னும் வெறி பிடித்த மிருகம் போல் இன்ஸ்பெக்டர் ரே, யின் துப்பாக்கி வெடிச்சத்தம் முழங்கிக் கொண்டு இருந்தது. கீழத்தூவல் கண்மாய் இரத்தத் தடாகமாக மாறியது. அந்த ஐந்து இளைஞர்கள் செய்த குற்றம் என்ன…? எதற்கு இவ்வளவு கொடிய தண்டனை…? பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை தலைவராக ஏற்றுக் கொண்டு, பார்வோட் பிளாக் கட்சிக்கு ஓட்டு அளித்தது தான் அவர்கள் செய்த குற்றமா. என்ன காரணத்திற்காக அந்த ஐந்து அப்பாவி இளைஞர்களை சுட்டு கொன்றனர்.இறந்த இளைஞர்களின் உடல்களை அவர்களது மனைவிமார்களும் குழந்தைகளும் கூடப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதேன்.... இறந்த ஐந்து இளைஞர்களின் உடல்களை மாலை பரமக்குடிக்குக் கொண்டு சென்று, பிரேத பரிசோதனைநடத்தாமலேயே பிணங்களை ரகசியமாய் போலீசாரே எரித்து விட்டனர். கீழத்தூவல் படுகொலையோடு நின்று விட்டதா, நிலைமை…? இல்லை. காங்கிரஸ் வெறியாட்டமும் போலீசின் காட்டுமிராண்டித்தனமும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. இளஞ்செம்பூர் கிராமத்தை தொடர்ந்து 19/09/1957... கீரந்தை கிராமத்தில் ராமுத்தேவர் என்பவர் அப்பகுதி மிக பெரிய நில சுவான்தார் கீரந்தையில் 50/60வீடுகள் கொண்டு கிராமம் அதை சுற்றி பணக்குளம், துத்தம்பல், பூளாங்குளம், பொட்டபச்சேரி, தத்தங்குடி,என பல ஊர்கள் பள்ளர்கள் கிராமங்கள் இரு சமுதாய மக்கள் ஒரு சகோதரர்களே போல் ஒற்றுமையாக வாழ்த......அந்த பகுதியில் 15/16/09/1957 தேதியில் அன்று போலீஸ் படை பள்ளர்கள் கிராமங்களில் இரவு நேரங்களில் கீரந்தையை மக்களை தாக்க வெளியூர் கூலி ஆட்கள் வந்தார்கள் உள்ளுர் ஆட்கள் உடன் படவில்லை.16 ந்தேதி இரவு கீரந்தை நாய் ஒன்று பூளாங்குளத் தெருவுக்குள் வர நாயை அரிவாளால் வெட்டினான் ஒருவன் அந்த நாய் வெட்டுக்காயங்களுடன் கீரந்தை வந்து சேர்ந்து அன்று இரவு பூளாங்குளம் வந்த போலீஸ்சாருடன் ஐயா கீரந்தை மறவன் எங்க ஆளை வெட்டி இழுத்துட்டு போறாங்க இந்த பாருங்க ரத்தம் கரை என்று சொல்ல உடனே போலீஸ் ரத்த கரையை வைத்து காலையில் விசாரணை செய்தார் கீரந்தை மக்களை, ஐயா நாங்கள் யாரையும் வெட்டவில்லை எங்க ஊர் நாயை அரிவாளால் அவர்கள்தான் வெட்டிட்டாங்க இது மனித ரத்தம் இல்லை நாய் ரத்தம் என்று சொல்ல இதோ நிக்கிறது அந்த நாய் என்று சொல்ல,கிழே கிடந்தத ரத்தத்தையும் நாயின் ரத்தத்தையும் டெஸ்ட் ரிப்போர்ட்டு அனுப்பினார்.இராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் அய்யர். ரிப்போர்டில் மனித ரத்தம் இல்லை நாய் ரத்தம் தான் என்று வந்தது. காலையில் இன்ஸ்பெக்டர் பூளாங்குளம் சென்று 11 பேர்களை அடித்து இழுத்து வந்து ரிமாண்ட் செய்தார். அன்று மாலை கீரந்தை மக்கள் இன்ஸ்பெக்டரை பார்த்து நன்றி சொல்லி விட்டு வந்தார்கள்.... 17ந்தேதி இன்ஸ்பெக்டர் சாமிநாதன் அய்யர் பணி இடம் மாற்றம் செய்யப்பட்டார். 11பேர்களை வழக்கு பதிவு செய்யாமல் விடுதலை செய்யப்பட்டார்கள். 11பேர்களும் கீரந்தை மக்களிடையே ஊர் ஏறி வந்து வன்பு சண்டை இழுக்க அடித்து விரட்டி அடிக்கப்பட்டன. 18 ந்தேதி அமைதியாக இருந்தது பள்ளர்கள் காங்கிரஸ் கூலி படையுடன் கிராமங்களில் ஆங்காங்கே கூடினார்கள். அன்று இரவு முழுவதும் கீரந்தையில் தூங்கவில்லை. 19ந்தேதி கீரந்தை கிராமத்தில் ராமுத்தேவர் உறவினர் வீட்டு பெண்ணுக்கு சடங்கு சுத்துதல் நிகழ்ச்சிக்கு கிராமம் உறவுகள் தயாரானார்கள்.... வெளியூர் மக்கள் வந்து இருந்தார்கள் நட்பு ரீதியாக பள்ளர்கள் சமூகமும் வந்து இருந்தார்கள்.... கீரந்தை ராமுத்தேவர் அவர்கள் சுற்றியுள்ள பள்ளர் கிராமங்களில் நட்புடன் நல்லது கெட்டது பொது நிகழ்ச்சி அழைப்பது உண்டு இவரும் மகிழ்ச்சியாக கலந்து கொள்ளுவது வழக்கம்..... திடீரென 50/60 மறவர்கள் வீடுகள் உள்ள கிராமத்திற்குள் இன்ஸ்பெக்டர் ஜான்சன் அத்து மீரி போலீஸ் வெறிப்படையுடன் நுழைந்தது சடங்கு வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் திகைத்து நின்றார்கள் அக்கிராம மக்களில் சிலர் சடங்கு வீட்டிலே விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். போலீஸ் பட்டாளம் அந்த வீட்டினுள் அத்துமீறி நுழைந்து விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் ஐந்து பேர்களை வெளியே இழுத்துக் கொண்டு வந்தனர்.அவர்களின் குழம்பு பிசைந்த கரங்களில், ஒட்டியிருந்த பருப்பு உலராத நிலையில், வெளியில் இழுத்து வந்து ஐந்து பேரை சுட்டுக் கொன்றான் இன்ஸ்பெக்டர் ஜான்சன். விருந்துக்கு வந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள் என்ன செய்வது என்று அறியாத மக்கள் திகைத்து நிற்க. விவசாய குடும்பமாச்சே ஆடு மாடுகளை கட்டிக்கிடந்த பக்கத்தில் இருந்த வைக்கோல் போரில் தீ வைத்தது போலீஸ்....... தீ மளமளவென்று எறிய ஏற்கனவே சுட்டுக்கொன்ற அந்த நான்கு பேர் உடலையும் எறியும் வைக்கோல் படப்புமீது தூக்கி எறியச்சொன்னான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்சன்.....அதில் ஒருவர் குண்டடிபட்டு குத்துயிர் குலையுமா கிடந்தார். அந்த ஐந்து பேரில் ஒருவர் கிழவக்குடும்பன் என்ற பள்ளர் சமூகத்தை சேர்ந்தவர் அவர் மறவர்களுக்கு ஆதரவாக இருந்ததால் அவரும் கொல்லப்பட்டார். இவர் பார்வோட் பிளாக் தொண்டர். என்ன செய்தார்கள் இந்த கிராமத்து மறவர்கள் இது எல்லாமே முன் ஏற்பாடு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு ஓட்டுப் போட்டார்கள் என்பதர்க்காவா, இல்லை காங்கிரசுக்கு ஓட்டுப்போடவில்லை என்பதர்க்காவா .....!!!! சற்று சிந்திக்கவேண்டும்... அன்று மாலை நரிக்குடிப் பக்கம் உள்ள பனைக்குடி, சிறுவார் என்ற கிராமங்களில் உள்ள மக்களை மலஜலம் கூடக் கழிக்க விடாமல், போலீஸ் லாரியிலேயே வைத்திருந்தனர் ஒருநாள் முழுக்க ஒரு சிலர் போலீஸ் லாரியில் ஒன்னுக்கு போய்விட்டார்கள் அவர்களை வெளியில் இழுத்து வந்து லத்தியால் தாக்கினார்கள் ஈவு இரக்கமின்றி போலீஸ் காட்டுமிராண்டித்தனமாக நடந்தது கொண்டார்கள்.... மறுநாள் அவர்களை உளுத்திமடை என்ற கிராமத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு போனதும், லாரியில் இருந்தவர்களில் நான்கு பேர்களைக் குறிப்பிட்டு, ” உங்களை விடுதலை செய்து விட்டோம்; போகலாம்” என்று அவர்களிடம் போலீசார் கூறினர். அந்த அப்பாவிகள் நான்கு பேரும் போலீசார் சொன்னதை நம்பி, லாரியில் இருந்து இறங்கினர்கள் தங்கள் ஊரை நோக்கி நடை போடத் தொடங்கினர்.போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்சன் பின்னால் இருந்து அவர்களது முதுகுப்புறமாக அந்த நான்கு பேரையும் சுட்டுக் கொன்றான் இரக்கமின்றி இத்தோடு நின்று விட்டதா, போலீஸ் அட்டூழியம்…? தாங்கமுடியவில்லை மழவராயனேந்தலில் ஒருவரைச் சுட்டுக் கொன்றனர் பல பேரை அடித்து நொறுக்கினர் மண்டையை உடைத்தார்கள் கை கால்களை ஒடித்தார்கள் ஏன் என்று மக்கள் அனைவரும் தெரியாமல் திகைத்து நின்றார்கள் ஏன் என்று கேட்க நாதி இல்லாமல் போனார்கள் கிராம மக்கள்....அந்த அளவிற்கு போலீஸ் அராஜகம். கீழத்தூவல், கீரந்தை உளுத்தி மடை, மழவராயனேந்தல் ஆகிய ஊர்கள் மொத்தம் பதினேழு பேர்களைச் சுட்டுக் கொன்றனர். அதில் ஒருவர் அரிஜன், இருவர் அகம்படியர். இப்படியாக பதினேழு பேரைப் பலி வாங்கியதோடு காங்கிரஸ் அரசின் வெறித்தனம் நின்று விட்டதா…? இல்லை. ஐயாயிரம் பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது 836 இருந்து 1200 குடும்பம் மீது பல தரப்பில் பொய் வழக்குகள் அந்த அந்த போலீஸ் சரகத்தில் போடப்பட்டது. இந்தக் கொலைகளைச் செய்ததற்காக இன்ஸ்பெக்டர் ரேவிற்கு காமராஜர் நாடார் ஆட்சியில் பொற்கிளி கொடுத்து கவுரவித்தார்கள் ...எவ்வளவு கேவலமான செயல்..... இதே இன்ஸ்பெக்டர் "ரே " தான் கேரளாவில் 1954 கண்ணனூர் மாவட்டத்தில் உள்ள மன்டைகாடு காட்டுக்குள் ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு எதிராக செயல் பட்ட கம்யூனிஸ்டுகள் 4 பேர்களை சுட்டு படுகொலை செய்தவன் இவனே இந்தப் படுகொலைகளனைத்தும் ஏழைப் பங்காளர் காமராசர் ஆட்சியிலே, அவரது ஆணையின் பேரிலேயே நடைபெற்றது. படுகொலைகள் காமராசர் நாடார் ஆட்சியில் புதிதல்ல நியாயம் கேட்டார்கள் துப்பாக்கியை காட்டினார்கள் காங்கிரஸ் சர்கார்....!!! இந்தக் கொலைகளுக்கு முன்னால் 1957 ஜனவரியில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அதில் 5 பேர்களை அழைத்து அரசு ஒப்புதல் கையெழுத்து போடச்சொன்னார்கள் மருத்த அந்த ஐந்து தொழிலாளர்களை சுட்டுக் கொன்றது காமராஜர் நாடார் ஆட்சியில் கருணை மிகு ஆட்சியல்லவா .... நேருவும் காமராஜர் நாடாரும் இணைந்து இந்திய தேசத்தில் அரசியல் செல்வாக்கையும் , ஆட்சியதிகாரத்தையும் பயன்படுத்திக் கொண்டு எதிர்க் கட்சிகளை நசுக்கும் கொடிய ஆட்சியாக காங்கிரஸ் காட்டுத் தர்பார் நடத்தியது. அந்தப் பகுதியிலே பார்வோட் பிளாக் செல்வாக்கைக் குறைப்பதற்கும், பசும்பொன் தேவரின் மீது பொய் வழக்குப் போட்டு அச்சுறுத்தவே இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. அரிசனமக்கள் ஓட்டுக்கள் தேவர் அவர்களிடம் போய் விடக்கூடாது என்பதற்காக போலீஸ் துணையுடன் இரு சமுதாய மக்களை மோதவிட்டார்கள் அன்று வைத்த சாதியத்தீ.........இரு சமுதாய இளைஞர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.......... படுகொலை செய்யப்பட்டவர்கள் : கீழத்தூவல் படுகொலை 1957 செப் - 14 1. வழிவிட்டாத்தேவர் மகன் தவசி யாண்டித்தேவர் 2. கருப்பசாமித்தேவர் மகன் சிவமணித்தவர் 3. முனியாண்டித் தேவர் மகன் சித்திரை வேல் தேவர் 4. ராமசாமித்தேவர் மகன் ஜெகநாதத்தேவர் 5. சோலை முனியாண்டித் தேவர் மகன் முத்துமணித்தேவர் கீரந்தைப்படுகொலை செப் - 19, 1957 1. குருவலிங்கத் தேவர் மகன் குமாரசாமித்தேவர், சாத்தங்குடி 2. வெள்ளைச்சாமித்தேவர் மகன் ஆறுமுகத் தேவர், அரியநாதபுரம் 3. தவசியாண்டித் தேவர் மகன் சேதுத் தேவர், அரியநாதபுரம் 4 . முனியாண்டிக் குடும்பன் , கடுகு சந்தை 5. வேலுச்சாமித்தேவர் மகன் குருநாதர் தேவர், கீரந்தை (மருத்துவமனை சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் இறந்தார்)அரசுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தார். உளுத்திமடை படுகொலை, செப் 19 மாலை 1957 1. முத்துச் சாமித்தேவர் மகன் கருப்பசாமித்தேவரை சுட்டு கொலை காரணம் கூற முடியுமா ஊர் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போனார்கள்....!!! எதர்க்காக இந்த கலவரம் காரணம் கூற முடியுமா..... ????? அப்பாவி மக்கள் துப்பாக்கி முனையில் சுட்டுக்கொலை செய்ய காரணம் கூற முடியுமா....??? இந்த கலவரத்தில் 1200 குடும்பத்தினர் மீது பொய் வழக்கு போட காரணம்கூறமுடியுமா....??? 1200 குடும்பமும் 18 மாத காலமாக மதுரை/புதுக்கோட்டை/இராமநாதபுரம்/திருச்சி என்று வாய்தாவுக்கா கட்டு சோறு கட்டிக்கொண்டு நடை பயணமாகவும் மாட்டுவண்டி கட்டியும் அவர் அவரது வசதிற்கு ஏற்றார் போல் வாய்தாவுக்கு அலைந்து கொண்டு திரிந்த நம் உறவுகளை பற்றி சொல்ல மாளாது....!!!! கொலை கொள்ளை அடி தடி தீ வைப்பு இப்படி மாக பாதகமான எந்த ஒரு செயலுக்கும் காமராஜர் நாடார் ஆட்சியில் பதில் கூறாமல் செவி சாய்த்து காங்கிரஸ் சர்கார்...!!!!???? நண்பர்களே உறவுகளை காரணம் புரிகிறதா... ஒட்டு மொத்த மக்கள் பார்வோட்பிளாக்குக்கு ஓட்டு போட்ட ஓரே காரணத்தினால் பொதுவாக அரிசனமக்கள் ஓட்டு தேவர் அவர்களுக்கு போய் விட கூடாது என்பதற்காக இந்த கலவரத்தை உருவாக்கி இரு சமுதாய மக்கள் இடையில் ஒரு பிரிவை உருவாக்கி விட்டார் காமராஜர் நாடார் ...... ஆட்சி அதிகாரத்தையும் பணபலத்தையும் வைத்து இந்த மண்ணில் காங்கிரஸ்காரர்கள் ஆட்டம் போட்டார்கள் ...1963 பசும்பொன் தேவர் அவர்கள் மறைவிற்கு பிரகு ஒட்டுமொத்த தமிழக மக்கள் காங்கிரஸ் ஆட்சியாளர்களை 1967 லில் சமாதி கட்டினார்கள்,ஒட்டுமொத்த காங்கிரஸ்காரர்களை 1967 க்கு அப்புறம் தமிழ் நாட்டில் தோழமை கட்சியாகத்தான் பயனிக்கிறார்கள் ..... எந்த காங்கிரஸ்காரர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை பார்த்து காங்கிரஸை காத்தான் என்ற பட்டத்தை கொடுத்தார்களோ அதே காங்கிரஸ்காரன் அவருக்கும் அவருக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்கும் என்ன என்ன கொடுமைகளை செய்யக்கூடாதோ அத்தனை நாச கொடுமைகளை செய்தவர்தான் காமராஜர் நாடார்.....!!!??? ஒரு மனிதனை மனிதன் தண்டிக்க நியாயப்படி... அரசியலில் புனிதம் காட்டிய ஒரு மகானை தண்டித்தார்கள் காங்கிரஸ்காரர்கள் அனியாயப்படி.... தமிழ் நாட்டில் காமராஜர் ஆட்சி மீண்டும் அமைப்போம் என்று ஒரு சில அரசியல் பதருகள் கூறுகிறார்கள் நடக்குமா....???கொடுமைகளை செய்தவர்கள் ஆட்சி எப்படி மலரும்....இந்த பூலோகம் இருக்கும் வரை காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் வராது ........... இந்த தேசத்தில் எத்தனையோ அரசியல் தலைவர்கள் தோன்றினார்கள் தோன்றுவார்கள்... பசும்பொன் தேவர் அவர்கள் மட்டுமே இறைவனாகிப் போனார் என்பது மட்டும் உண்மை.....என்பதை நாம் நம்புவோம். நண்பர்களே உறவுகளே...... தொடருகிறேன்...... நட்புடன் க.பூபதி ராஜா

No comments:

Post a Comment