Tuesday 9 July 2024

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Sadaiyandi puregold sms

மாற்று சமூகத்தில் இப்படி ஒருத்தர் இருந்தால் கோபுரத்தில் தூக்கி வைத்து கொண்டாடியிருப்பார்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் திருத்தொண்டர், எத்தனையோ கோடீஸ்வர தேவரின தலைவர்கள் இருக்கிறார்கள் நினைத்தால் ஒரு சேனல் உருவாக்கி இருக்கலாம் தலைவர்கள் எல்லாம் பணத்தால் மட்டுமே உயர்ந்தவர்கள் குணத்தால் அல்ல , ஆனால் பேரன்பு கொண்ட மச்சான் திரு Sadaiyandi Puregold Sms சடையாண்டி அவர்கள் எப்போதும் உள்ளத்தால் உயர்ந்தவர் தனது பணிகளை விட்டுவிட்டு எந்த ஊர்களானலும் சரி எந்த தலைவர்கள் ஆனாலும் சரி தேவர் என்ற ஒரு சக்திக்காக தேவர் மீடியா என வலைதள தொலைக்காட்சியை உருவாக்கி கிராமம் வாரியாக லட்சோப லட்சம் மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார்,சமூகத்திற்கும்,தேவர் மீடியாவுக்கும் துளியளவும் உதவி செய்யாதவர்கள் கூட ஒரு பதிவு மீடியாவில் சசிகலாவுக்கு ஆதரவாக,டிடிவிக்கு ஆதரவாக,ஓபிஎஸ் சுக்கு ஆதராவாக வந்துவிட்டால் போதும் புரட்சி போராளி ஆகி விமர்சிக்க ஆரம்பித்துவிடுவார்கள், தேவர் மீடியாவை பார்த்து ஆரம்பித்த மாற்று சமூகத்தினர் அவர்களுக்கு பிடித்த பெயர்களில் மீடியா ஆரம்பித்து அதிக சப்ஸ்கிரைபர்களை உருவாக்கி அவர்கள் சமூகத்தினரிடம் வசூல் வேட்டையில் இறங்கி செழிப்புடன் மீடியா நடத்துகிறார்கள், ஆனால் எவ்வித எதிர்பார்ப்புமின்றி வெளிநாடுகளில்,வெளி மாநிலங்களில் வசிக்கும் தேவர் திருமகனாரின் தொண்டர்களுக்காக பசும்பொன்னிலும்,கோரிப்பாளையத்திலும்,ஒவ்வொரு சமூக நிகழ்வுகளையும் நேரலையில் கொண்டு சேர்த்திருக்கிறார், கீழத்தூவல் காவல்துறையினரால் துன்புறுத்தி படுகொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் மரண சம்பவத்தை கடைசி வரை பதிவு செய்து ஊடகங்கள்,பல சமூக தலைவர்களின் கவனத்தை ஈர்த்தவர் எப்போதும் சாந்தமாகவே இவரை பார்த்த நான் மக்கள் கூட்டம் முன் ஆக்ரோஷத்துடன் அதிகாரிகளிடம் சண்டையிட்டதை பார்த்து வியந்தேன், இராமநாதபுரம் சேதுநாட்டு மன்னர் குமரன் சேதுபதி அவர்களின் தீவிர விசுவாசி,மன்னர் காலமான பின் முடிசூட்டிய இளைய மன்னர் திரு நாகேந்திர சேதுபதி அவர்களை மக்களின் முன் பிரகாசிக்க செய்தவர், நேதாஜி,முத்துராமலிங்கத்தேவர்,மூக்கையாதேவர்,சசிவர்ண தேவர்,பெருமாள் தேவர்,குருசாமி பிள்ளை,சோலை குடும்பர்,மொக்கையன் அருந்ததியர் ,ஆண்டித்தேவர் கட்டிக்காத்த அகில இந்திய பார்வர்ட் பிளாக் இயக்கத்தை காக்க ஸ்ரீவை சுரேஷ் தேவர் அவர்களின் தலைமையேற்று பணியாற்றும் தேச பக்தர்,முக்குலத்தோர் எழுச்சி கழகம் பொதுச்செயலாளர் அண்ணன் விஆர்கே.கவிக்குமார் அவர்களின் அன்பிற்கு கட்டுபட்டவர் ,இப்பேற்பட்டவர் நமது சமூகத்தின் பொக்கிஷம் ,இனி வரும் காலங்களில் தேவர் மீடியா நல்ல முறையில் பிரம்மாண்டமாக வளரவும்,மகிழ்வோடு பல்லாண்டு காலம் நலமுடன் வாழ தேவர் திருமகனாரை வேண்டிக்கொண்டு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..❤ இரா.பசும்பொன் ராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர், முக்குலத்தோர் எழுச்சி கழகம் மதுரை மாநகர் .

No comments:

Post a Comment