Sunday, 7 July 2024
உடலுக்கு மரியாதை இல்லை உயிருக்கு தான் மரியாதை - தேவர்
"உடலைவிட்டு உயிர் நீங்குவது அத்தனையும் மரணமல்ல. அறியாத பேராசையின் பெயரால், பணிப்புற்று கிடந்த, இழிந்து சாகிற சாவெல்லாம் சாவாகும். ஒருவர் மிகப்பெரிய அளவுடைய சரீரம் பெற்றவராயிருக்கலாம், ஏராளமான கோடிக்கணக்கான ஆபரணத்தை அவர் அணிந்திருக்கலாம், அவ்வளவு இருந்த போதிலும், அவர் உயிர் போய்விட்டது என்றால் அது பிரேதம். அதை ஒருவரும் வைத்திருக்க அனுமதிக்க மாட்டார்கள். அதை எங்காவது கொண்டுபோய் அழித்தாக வேண்டும்.
அதே நேரத்தில் அங்கெமெல்லாம் குஷ்ட நோயால், அழுகு நோயால் சிரமப்பட்டு, புழுக்கள் ஏறுகின்ற விதத்தில்கூட ஒரு சரீரம் இருக்கலாம். தன்னுடைய தாயும் மனைவியும் கூடத் தொடுவதற்குக் கூசலாம். அப்படிப்பட்ட சரீரத்தில் உயிர் இருக்குமானால், அடுத்தவன் திண்ணையிலாவது இருப்பதற்கு இடம் கொடுப்பான். அப்படியானால் இந்த உடலுக்கு மரியாதையில்லை. இவ்வுடலின் மேல் உள்ள ஆடை, ஆபரணங்களுக்கு மரியாதையில்லை. கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு இந்த உடலைத் தாங்கி நிற்கிற, உள்ளிருக்கிற அணுவிலும், அணுவாக இருக்கின்ற உயிரைப் பொறுத்துதான் இப்பெரிய உடலுக்கு மரியாதை. - பசும்பொன் தேவர்.
1959 அக்டோபர் 10ம் தேதியில் பொள்ளாச்சி ஸ்ரீகுடலுருவி மாரியம்மன் கோவில் 12வது நவராத்திரி ஆண்டு விழாவில் சக்தியின் சக்தி என்ற தலைப்பில் பசும்பொன் தேவர் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.
(Sadaiyandi puregold sms)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment