Friday, 28 July 2017

சாதுக்களை வணங்கியவர் தேவர்

முத்துராமலிங்கத் தேவர்
வரலாற்றைப் பார்த்தீரானால்...

இயற்கையிலேயே
செல்வக்குடியில் பிறந்தவர்...
ஒழுக்கத்தில் சிறந்தவர்..
பரோபகாரம் உள்ளவர்..

சாதுக்களை வணங்கியவர்..
சத்தியமும் நேர்மையும்
அவரின் இரு கண்கள்...

விடுதலை போராட்ட
வீரரும் ஆவார்...

பெருமானார் மேல்
பெரும் பக்தி கொண்டவர்...

ஆறாம் திருமுறையில்
திருவருட்பா வின் 
சில பாட்டுகளை
மறைத்த சில சொந்தபந்தங்களுக்கு

ஞானதிருஷ்டியாலே அவைகள்
எழுதியவாறே பாடி திகைப்படையச்
செய்த வித்தகன் இவராம்...

சீர் உற்று  சிறப்புற்று
வாழ்ந்தும்
முகத்தினில் ஒளி பெற்றும்
பெரும்பேறு பெற்றார்...

இவருக்கு முன்பாக
இறைவனால்
வள்ளல் பெருமானார் ...

ஆட்கொள்ளப்பட்டார்
அறியாப் பருவத்திலே..

உலகக்கல்விகள்
உலகாள்பவனால் புகுத்தப்பட்டது...

பெரியவர்கள் பணிந்தும்
புகழ்ந்தும் பாராட்டுகின்ற
ஞானம் கிடைத்தது...

உடல் முழுவதும்
அருளாகிய ஒளி புகுந்து
அவர் வதனமே பொன்னுடம்பானது...

அவரின் படைப்புகளாம்
அருட்பாக்களும் அகவலும்...

ஒருவன் அழியாமல்
தன்னைக் காத்துக்கொள்ளும்
அறிவைத் தந்தது...

அவர் தொட்டதும்
தொடங்கியதுமான...

தர்மசாலை ஞான சபை
சமரச சுத்த சன்மார்க்கம்
யாவும் மறையாமல் நிலைத்திருக்க..

இவரோ மரணமிலாப் பெருவாழ்வோடு
அழியாப் பெருமையுடன்
ஆளுகை நடத்துகிறார்..

இத்தகைய புகழ் மணக்க
இவரை ஈன்ற
நல்ல தாயானவர்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராம்...

சீர் உற அருளாம் தேசு உற
அழியாப் பேர் உற,
என்னைப் பெற்ற
நல்தாயே...
*****************--***************************
முகநூல் பதிவு பதிவிட்டவர்
ஆதி குணவேல் (வள்ளலார் பக்தர்)

No comments:

Post a Comment