Saturday, 22 July 2017

எல்லா வகையான மாறுதல்களையும் பெற்ற ஆதிமொழி

ஆதியிலிருந்து பிறந்த ஒலியை வடிவமாக்கி எழுத்து ரூபம் கொடுக்கப்பட்டது. எழுத்துக்கள் உருவ எழுத்து, கோட்டெலுத்து, கோலெழுத்து, சதுர எழுத்து என நான்கு வகைப்படும். உருவ எழுத்தாக தமிழ் இருந்த காலத்திலேயே சீனம் முதலிய பாஷைகள் பிரிந்தன. கோட்டெழுத்தாக இருந்த காலத்திலே சமஸ்கிருதமும் மற்றுமுள்ள பாஷைகளும் பிரிந்தன. வட்ட எழுத்தாயிருந்த காலத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பாஷைகள் பிரிந்தன. இன்றைய தமிழெழுத்து சதுர எழுத்தாயிருக்கிறது.

இந்த எல்லா வகையான மாறுதல்களையும் பெற்ற ஆதிமொழி தமிழாகும்.
- பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

#மதுரை திருவள்ளுவர் கழகத்தினர் 13.2.1949 ல் மதுரை சௌராஷ்டிரா பெண் பாடசாலையில் நடத்தியத் திருக்குறள் அஷ்டாவதான வைபவத்திற்குத் தலைமை பேருரை.#

No comments:

Post a Comment