பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் இறுதி ஊர்வலத்தில் தலைவர்கள் பேசியது:
அண்ணா பேசுகையில்
கூறியதாவது:_
“தேவரை இழந்தது எனக்கு தாங்க முடியாத
வேதனை அளிக்கிறது. தென்பாண்டி மக்களின் இதயத்தைக்
கவர்ந்த தலைவர் அவர்.
எது எது மக்களுக்குத் தேவையோ, அவைகளையெல் லாம்
வீரத்தோடும், அஞ்சா நெஞ்சத்தோடும் எடுத்துச் சொன்னார்.
ஒருமுறை சட்டசபையில் அவரைப் பாராட்டி நான்
பேசினேன். “உங்களைத் திட்டும் தேவரை நீங்கள்
பாராட்டலாமா?” என்று சிலர் கேட்டார்கள். “அவர்
செய்யும் நல்ல செயல்களை எடுத்துச் சொல்லாவிட்டால் என்
மனச்சாட் சிக்கு துரோகம் செய்தவன் ஆவேன்” என்று பதில்
அளித்தேன்.”
இவ்வாறு அண்ணா கூறினார்.
காமராஜர்
தேவர் மறைவு குறித்து, காமராஜர் விடுத்த அனுதாபச்
செய்தியில், “தேவர் மரணம் குறித்து மிகவும்
வருந்துகிறேன். சுதந்திரப் போராட்டத்தில், வீரத்துடன்
ஈடுபட்டார். மனதில் சரி என்று பட்ட
கொள்கையை தைரி யத்துடன் சொல்லக்கூடியவர்”
என்று குறிப்பிட்டு இருந்தார்.
சுதந்திரா கட்சித் தலைவர் ராஜாஜி விடுத்த
செய்தியில், “நேர்மை, பக்தி, தைரியம்
ஆகி யவை ஒரு தனி மனிதனை நன்கு பிரகாசிக்கச்
செய்யும். அந்தப் பண்புகளைக் கொண்டவர் முத்துராமலிங்க
தேவர். அதனால் அவர் புகழுடன் பிரகாசித்தார்”
என்று கூறியிருந்தார்.
எம்ஜிஆர் கூறியது,
ஒரு மிகச்சிறந்த மகானை தமிழகம் இழந்து விட்டது,சரித்திரம் பேசும் ஒரு மிகச்சிறந்த மகான் தேவர் ஐயா,என்று கூறினார்
No comments:
Post a Comment