Saturday, 22 July 2017

ராஜதந்திரம் என்றால் என்ன - பசும்பொன் தேவர்

பெரிய குழப்பமான காலங்களில் நாட்டிலுள்ள குற்றமற்ற மக்களுக்குத் துன்பம் ஏற்படாத வகையில், வயதானவர்களும், தாய்மார்களும் குழந்தைகளும் அவதிப்படாத வகையில் நாட்டில் நிரந்தர அமைதியும்,சமாதானமும் நிலவச் செய்யும் வகையில் இரு பெரிய தேசங்களிடையே ஏற்படயிருக்கும் யுத்தத்தைத் தவிர்ப்பதற்காக உபயோகப்படுத்தும் சாமர்த்தியத்தைத் தான் "ராஜதந்திரம் " என்பார்கள். ஆனால் பொய்களுக் கெல்லாம் ராஜதந்திரம்! செய்யும் அநியாயச் செயல்களுக்கு எல்லாம் ராஜதந்திரம்! என்று தற்காலத்தில் இவர்கள் சொல்லிச் சொல்லி அந்த புனித வார்த்தையையே மாசுபடுத்தி விட்டார்கள்.-

தெய்வீகத்திருமகனார் பசும்பொன்
உ.முத்துராமலிங்கத்தேவர்

No comments:

Post a Comment