Friday, 7 February 2025

யார் இந்த திருச்சி பி.ஆர்.தேவர்

திருச்சி பி.ஆர். தேவர்  நூலை பதிவேற்றம் செய்த பிறகு அவர் பற்றிய  செய்திகளைச் சொல்வார்கள்  என்று எதிர்பார்த்தேன்.
              அவரது வீட்டைச் சொல்கிறார்கள்,
பிற்கால போலீஸ் அதிகாரி யின் உறவினர் என்கிறார்கள்.பி. ரத்னவேல் தேவர் எவ்வளவு பெரிய ஆளுமை என்பதை அறிந்தார் இல்லை.வருத்தம் தான் எஞ்சியது.
                 பி.ஆர்.தேவர் திருச்சி நகராட்சி தலைவராக இருந்தார்,காவிரியில் பெருவெள்ளம், திருச்சி நகர் குடிநீர் அமைப்பை சின்னாபின்னப்படுத்தி விட்டது. வெள்ளம் வடிந்த பின் குடிநீர் வழங்க முடியவில்லை. அலுவலர்கள் சீரமைப்புத் திட்டம் ஆய்ந்து அறிக்கை தயாரித்து திட்டச் செலவுக்கு ஒப்புதல் பெற பிரிட்டீஷ் அரசை அணுகவேண்டும். அது லண்டனில் முடிவு செய்யப்படவேண்டியது. மாதங்கள்,வருடங்கள் ஆகலாம். அது வரை மக்களை குடி தண்ணீருக்குத் தவிக்கவிடுவதா. 
                          தனது சொந்தச்  செலவில் குடிநீர்த்திட்டப்பணிகளை  மேற்கொண்டார்.  ஒரே வாரத்தில் குடி வழங்கப்பட்டது.
                            அதிர்ந்தது வெள்ளை அரசு.பிரிட்டீஷ் அரசை மீறிய ஆளுமையா.., கோபம் கொண்ட அரசு நகரசபை நிர்வாகத்தைக் கலைத்தது.ஜஸ்டீஸ் கட்சியை விட்டு வெளியேறினார்.
மக்கள் தலைவர் பி.ஆர்.தேவர் மீண்டும் வென்றார். காங்கிரஸில் இணைந்தார்.
சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
திருச்சியில்  நடந்த மதக்கலவரத்தை  முடிவுக்குக்கொண்டுவந்தார். 
                 காந்தி, நேரு  ராஜாஜிபோன்ற முக்கிய தலைவர்களெல்லாம்  இவரை அறிந்து இணக்கமாயினர். இவரது இல்லத்திற்கு வந்து உணவருந்தாத காங்கிரஸ் தலைவரே இல்லை எனலாம்.
                       பசும்பொன் தேவரை விட வயதில் மூத்தவர்.பசும்பொன்தேவர் தனது உறவினர் மகளை பி.ஆர்.தேவர் மகன் தியாகராசனுக்கு மணமுடித்து வைத்தார்.
                       1960 ம் ஆண்டு முதல் 1962ஜனவரி13 முடிய பசும்பொன்தேவர் திருச்சி பி.ஆர்.தேவர் இல்லத்தில் தான் தங்கியிருந்தார். தேவர் தங்கி இருந்த அறை,நாற்காலி,சாய்வுநாற்காலி  போன்றவை  பி.ஆர்.தேவரின் பேரன் ரத்தினவேல்தேவர்  அவர்களால் இன்றும் பாதுக்கப்பட்டுவருகிறது. 
                  நடுக்கமற்ற மனிதர் அஞ்சாநெஞ்சர்  திருச்சி.பி.ஆர்.தேவர்
இன்னும் நிறையச் செய்திகள் இருக்கின்றன.

பதிவு:ஐயா VS.நவமணி 
AIFB முன்னாள் மாநில தலைவர். 

No comments:

Post a Comment