திருக்கோயிலின் சிறப்பு
சேதுபதி மன்னார்களின் குலதெய்வமாகவும், ருத்ரன், விஷ்ணு, ப்ரும்மா, துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என்று அழைக்கப்படும் தெய்வங்களுக்கு அப்பாற்பட்ட பராசக்தியாக விளங்கும் தெய்வமாகவும், அரண்மனை நடுவில் தனிக்கோயில் கொண்டு வடக்கு முகமாக எழுந்தருளி தாமிர பத்மதள விமானம் கர்ப்பக்ரஹம், அர்த்த மண்டபம் மஹா மண்டபம் முன் மண்டபம், சுற்றுப்பிரகாரங்கள் கூடிய ஆலயத்தில் பிரகாசித்துக் கொண்டு சக்தி பீடங்களில் ஒன்றாக அருள்தரும் இராஜேஸ்வரி அம்பாள் அருள்பாலித்து வருகின்றாள்.
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் மைசூர் சேனையால் மதுரை நிச்சயமாக அழிந்துவிடும் என்ற சமயத்தில் மன்னர் திரு விஜயரெகுநாத சேதுபதி அவர்கள் 25000 மறவர் சேனைகள் தலைமையில் சென்று மைசூர் சேனையை பலமாகத் தாக்கி யுத்தத்தில் இருமுறை முறியடித்து புறமுதுகிட்டோச் செய்தார்.
திருமலை நாயக்க மன்னர் சேதுபதி மன்னரின் வீரத்தை பாராட்டி "திருமலை சேதுபதி" என்ற பட்டத்தையும் "ராணி தாலிகாத்தான்" என்ற பட்டத்தையும் சூட்டினார். தங்கத்தில் துர்கா விக்ரஹம் கொடுத்து தாம் மதுரையில் நவராத்திரி விழா கொண்டாடுவது போல் நீங்களும் இராமநாதபுரத்தில் கொண்டாடுங்கள் என்று ஆசீர்வதித்தார்.
ஆதியில் நரபலி முதலிய வாமபூஜைதான் துர்க்கைக்கு ஆராதிக்கப்பட்டு வந்தது. ஜீவகாருண்யம் படைத்த பெருமதிப்பிற்குரிய ரவிகுல திலக ராஜாதி ராஜ ஸ்ரீ பாஸ்கர சேதுபதி மஹாராஜா அவர்கள் பண்டிதர்களைக் கலந்து சாதுர் மாஸ்ய பூஜை சமயத்தில் சிருங்கேரி சமஸ்தான ஸ்ரீஸ்ரீ ஜெகத்குரு சிவாபி நவ நரஸிம்ம பாரதீஸ்வாமிகள் அவர்களை பிரார்த்தித்து. ஜகத்குரு சன்னிதானமும், துர்க்கையினுடைய உக்ரகலையை நிவர்த்தி செய்து, ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை செய்து சாந்தமான கலை ஏற்படுத்தி ஆதி சைவர்களால் நடந்து வந்த வாம பூஜையை வேத பூஜையாக மாற்றி அது முதற்கொண்டு சிருங்கேரி மடத்து ஆசாரப்படி தற்சமயம் வைதீக பூஜையில் மேம்பட்டு விளங்கிக் கொண்டிருக்கின்றது.
சிருங்கேரி மடத்து சீடர்களைக் கொண்டே சாரதா பீடத்தில் பூஜை நடப்பது போலவே பூஜை நடத்தவும் ஏற்பாடு செய்து இன்றளவும் நடைமுறையில் உள்ளது.
No comments:
Post a Comment