பாகிஸ்தானை கேட்டவனும் முட்டாள்,அதனை கொடுத்தவனும் முட்டாள் என்றார் தலைவர் தேவர் அவர்கள். பாகிஸ்தான் பிரிவினை மட்டுமில்லை எந்தவொரு பிரிவினைவாதத்தையும் ஃபார்வர்டுபிளாக் இயக்கம் ஆதரித்ததில்லை.பாகிஸ்தான்,பங்களாதேஷ் நாடுகளை இன்றுவரை ஃபார்வர்டுபிளாக் இயக்கம் ஒன்றுபட்ட இந்தியாவாக தான் பார்க்கிறது.அதன் அடிப்படையில் ஃபார்வர்டுபிளாக் இயக்கத்தில் Bangladesh Bharat Pakistan Peoples Forum என்கின்ற ஒரு துணைநிலை அமைப்பு உள்ளது.ஒன்றுபட்ட இந்தியா என்பதை வலியுறுத்தி இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.இந்த அமைப்பின் தேசிய செயலாளர் பங்களாதேஷ் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் மையூதீன் கான் படேல் அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.Bangladesh Bharat Pakistan Peoples Forum அமைப்பின் இந்திய நாட்டின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.மையூதீன் கான் படேல் அவர்கள் தற்போது முழுவதுமாக குணமாகி இன்றைக்கு மருத்துவமனையில் இருந்து புறப்படுகிறார் என்ற செய்தி கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.ஜெய்ஹிந்த்!!!
Thursday, 4 January 2018
Monday, 25 December 2017
சித்தபாசு
தலைவர் சித்தபாசு அவர்களின் 92-வது பிறந்ததினம் இன்று. தன்னுடைய மாணவர் பருவத்தில் அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் இயக்கத்தில் இணைத்து கொண்ட தலைவர் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் இயக்கத்திற்காகவே வாழ்ந்து மடிந்தார்.இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் இயக்கத்தின் தேசிய பொதுச்செயலாளராகவும்,பாராசத் நாடாளுமன்ற தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தொடர்ந்து இருந்தார்.சபாநாயகர்,துணை சபாநாயகர் இல்லாத போதும் சட்டமன்றத்தை நடத்தக்கூடிய அனுபவம் மிக்க தலைவராக திகழ்ந்தார்.தலைவர் அவர்கள் ஒரு அறிக்கை விடுத்தாலோ அல்லது கருத்துக்கள் தெரிவித்தாலோ அது தேசிய அளவில் மிகவும் கவனிக்கத்தக்க வகையில் அமைந்து இருந்தது.மாணவர் அணி(AISB),இளைஞர் அணி(AIYL),மகளிர் அணி(AIAMS),விவசாயிகள் சங்கம்(AIAKS) என்று இயக்கத்தில் துணைநிலை அமைப்புகளை உருவாக்கி இயக்கத்தை மறு கட்டமைப்பு செய்தவர்.இயக்கத்தை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர்.தலைவர் அவர்கள் தற்போது நம்முடன் இல்லை என்றாலும் நமக்கான ஒரு வலுவான அரசியல் கட்டமைப்பை அவர் ஏற்படுத்தி வைத்துள்ளார்.அதனை பின்பற்றி இயக்கத்தை வலுப்படுத்துவதே நாம் அவருக்கு செலுத்துகின்ற உரிய மரியாதையாகும்.தலைவர் சித்தபாசு அவர்கள் பிறந்த தினமான இன்றைய நன்னாளில் தலைவர் அவர்கள் விட்டுச்சென்ற பணியை தொடர்ந்து செய்திட பாடுபடுவோம் என்று ஃபார்வர்டுபிளாக் தொண்டர்கள் சபதம் ஏற்போம்.வாழ்க நேதாஜி!! வாழ்க தேவர் புகழ்!! வாழ்க ஃபார்வர்டுபிளாக்!! ஜெய்ஹிந்த்!!!