Tuesday, 16 September 2025

வள்ளல் பாண்டித்துரைத்தேவர் அரிய புகைப்படம்

1895 ஆம் ஆண்டில் இராமநாதபுரம் அரண்மனையில் எடுக்கப் பெற்ற அரிய புகைப்படம் இது. 

இடதுபுறம் அரச குடும்பத்தைச் சேர்ந்த தமிழ்ப் புலவர் பாண்டித்துரைத் தேவரும் வலதுபுறம் நமது ஆசுகவி 'தேவகோட்டை வீர. லெ. சிந்நயச் செட்டியார் அவர்களும் உள்ளனர்.

தேவகோட்டை எல்லையில் உள்ள சிலம்பணியில் கோயில் கொண்டுள்ள சிதம்பர விநாயகர் மீது தேவகோட்டை 'ஆசுகவி வீர.லெ. சிந்நயச் செட்டியார் அவர்கள் இயற்றிய நூறு பாடல்கள் கொண்டது சிலம்பைப் பதிற்றுப் பந்தந்தாதி' ஆகும்.

'முதற் கடவுளான விநாயகரே முன்னின்று முடித்து வைப்பான் ஏன்று அவர் மீதே இதனைப் பாடுகின்றேன்' என எனக் கூறுவது காப்பு.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தேவகோட்டை சிலம்பைப் பதிற்றுப்பத்தந்தாதி

காப்பு

சீரார் சிலம்பைத் திருநகரில் சிதம்ப ரவிநா யகன்மீது

பாரார் பரவும் தமிழ்ப்பதிற்றுப் பத்தந் தாதி பகரலுற்றேன்

நேரார் பிறர்க்குத் தனை நினைந்து நிகழ்த்து நூலு நிரப்பியிடும் ஏரார் கருணை அவன் முன்னின்(று) இதனை முடிக்கும் இனிதென்றே .

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தகவல்
ராமஸ்வாமி பாலசுப்ரமணியன்

No comments:

Post a Comment