2016 ஆண்டிலிருந்து தேவர் மீடியா Facebook ல் செயல்படுகிறது. அதன் பிறகு கொஞ்ச காலம் கழித்து Youtube ல் ஆரம்பித்தோம். அதன் பிறகு Website ஆரம்பிங்க முடிவு செய்தோம். அப்போது Thevarmedia.com எனப் டொமைன் நேம் தேர்வு செய்தோம். அப்போது வெப்சைட்டின் About பகுதியில் தேவர் மீடியாவின் வரலாறு நோக்கம் பற்றி பதிவு செய்ய வேண்டும் நீங்கள் எழுதி தாங்கனு சொன்னபோது. நான் தான் தேவர் மீடியா துவங்க காரணம் என்ன, நோக்கம் என்ன, செயல்பாடுகள் என்ன என எழுதினேன். அப்படி எழுதிய போது தேவர் மீடியாவிற்கு என துவக்க நாளும் தேவைப்பட்டது. நானே அதற்கென ஒரு தினத்தை தேர்வு செய்தேன். அதுதான் 2016 ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி.
அதே தேதியில் இம்மானுவேல் நினைவு நாள், பாரதியார் நினைவு நாள் என சில நிகழ்வு தினமாக இருத்தது. உண்மையில் அந்த தேதியில் தான் தேவர் மீடியா துவங்கப்பட்டதா என்றால் அதுவும் இல்லை. பிறகு ஏன்?
தேவர் மீடியாவில் நான் முதன்முதலாக பதிவு போட்ட தினம் அது. எனது முதல் பதிவு தினத்தையே தேவர் மீடியாவின் துவக்க தினமாக தேர்வு செய்தேன். அந்த தினமே இப்போதும் தேவர் மீடியா ஆண்டு விழாவாக கொண்டாடப்படுகிறது. (எனது முதல் பதிவு தினம்)
நான்கு ஆண்டுகளுக்கு பிறகே தேவர் மீடியாவுக்கு ஆண்டு விழா என தனி விழாவாக நாம் முதன்முதலாக கொண்டாட ஆரம்பித்தோம்.
No comments:
Post a Comment