தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கமின்றி நடந்து கொள்கிறவன் பொதுவாழ்வில் ஒழுக்கத்துடன் நடப்பான் என்பது வடிகட்டிய புரட்டு.
எவ்வளவுதான் விஷய ஞானம் உள்ளவனாக திறமைசாலியாக இருந்தாலும் சொந்த வாழ்வில் ஒழுங்கீனம் புரிந்தவனை தலைவனாகவோ, தொண்டனாகவோ ஏற்றுக் கொள்வது பெருங் கேடாய் முடியும்.
பகை மூளுவதன் கருவே விருப்பம்தான். விருப்பமற்ற இடத்தில் வெறுப்பு அழியும். வெறுப்பு அழிந்த இடம்தான் ஈசனின் திருவடி.
எதையும் விரும்பாதீர்கள். எதிலும் விசேடமான விருப்பத்தை வைக்காதீர்கள்.
மனச்சாட்சியுள்ள ஒருவன் மனிதனாகிறான்; மனசாட்சி இல்லாத மனிதன் மிருகமாகிறான்.
அதிகாரத்தில் ஆசைப் பட்டவன் எந்த அக்கிரமங் களையும் புரிய தன் மனதை பழக்கிக்கொண்டுவிடுகிறான். அதிகாரம் வாய்க்கிறது. அதிகாரம் வாய்க்கப்பெற்ற வனைச் சுற்றி பலர் மொய்த்துக்கொண்டே இருப்பார்கள். அன்பிற் காகவா? அல்ல. அதிகாரத்தி லிருந்து சுய சாதகத்தை இயன்றவரை உருவிக் கொள்வதற்காகவே.
உயர்குடி, தாழ்ந்த குடி என்று மனிதனை பிரித்தாலும் அவனவன் மனநிலையைப் பொறுத்தே உயர்ந்த மனிதனாகிறான்.
ஆண்டவனை முழுக்க முழுக்க நம்புகிற நான், என்னைச் சூழும் கேடுகளையும் ஆண்டவனிடமே முறையிட்டு விட்டு அமைதியானேன்.
தெய்வீகமற்ற தேசத்தில் நீசத்தன்மைதான் பெருகும். நீசத்தன்மை பெருகிய தேசத்தில் நல்லவர்கள் மைனாரிட்டி ஆகிவிடுவார்கள்.
நல்லவைகளையும் நல்லவர்களையும் உண்டாக்கி தேசியத்திற்கு விநியோகிக்கும் சக்திதான் தெய்வீகம். இந்த தெய்வீக சக்தியை வேண்டாத தேசியம், தேசியம் ஆகாது. - #பசும்பொன்_தேவர்
மனிதன் எண்ணங்கள் பேச்சின் மூலம் வெளிப்படுகின்றன. அதற்காகத் தான் " மரம் காய்த்த பின் பார் - மனிதனை பேசவிட்டு பார் என்றார்கள். - #பசும்பொன்_தேவர்.
No comments:
Post a Comment