Thursday, 21 November 2024

லலிதா ஜூவல்லரி நிறுவனர் மாறிய கதை.

லலிதா ஜூவல்லரி நிறுவனர் மாறிய கதை.
சென்னையில் நீண்ட காலமாக செயல்படும் ஒரு நகைக்கடை லலிதா ஜுவல்லரி (Lalitha Jewellery).  அந்தக்கடையை ஒரு வயதான நபர் நடத்தி வந்தார்.  அப்போ வடநாட்டிலிருந்து ஒரு வியாபாரி தோடு உள்ளிட்ட நகைகளை செய்து வந்து மொத்த வியாபாரமாக சென்னைக்கு வந்து லலிதா ஜுவல்லரி உள்ளிட்ட பல கடைக்களுக்கு மொத்த விலையில் விற்பனை செய்து வந்தார். அப்படி விற்பனை செய்து வந்த வடநாட்டு வியாபாரி லலிதா ஜுவல்லரி முதலாளியிடம் வியாபாரம் தொடர்பாக ஆலோசனைகளை ஆர்வமாகவும் அக்கரையோடும் பேசுவார். அந்த வடநாட்டு வியாபாரியை லலிதா ஜூவல்லரி ஓனர் பெரியவருக்கு பிடித்து போனது. அவரிடம் நன்றாக பெரியவர் பேசுவார். அப்போது பெரியவர் தனது கஷ்ட நிலையை வடநாட்டவரிடம் கூறியுள்ளார். அந்த லலிதா ஜூவல்லரி ஓனருக்கு நிறைய கடன் இருந்துள்ளது. வயதானதால் கடையையும் சரியாக கவனிக்க முடியவில்லை . இதுபற்றி வடநாட்டு வியாபாரிடம்  என்ன செய்வது என கவலையாய் கூறியுள்ளார். 

அதை கேட்ட அந்த வடநாட்டு வியாபாரி அந்த பெரியவருக்கு உதவும் வகையில், சரி உங்க கடையை பெரிய தொகை கொடுத்து நானே வாங்கி கொள்கிறேன். அந்த தொகையின் ஒரு பகுதியை வைத்து கடனையும் அடைத்து விடலாம். நீங்கள் கடைசி காலத்தில் ஓய்வெடுங்கள் என பேசி முடித்து  கடை வடநாட்டு வியாபாரியிடம் வசம் வந்தது. 

இந்த வடநாட்டு வியாபாரி வாடிக்கையாளர் தேவை அறித்து புதிய மாடல் நகைகளை அளிமுகம் செய்தார். அதுவும் மிகக்குறையில் விலையில். மக்களை கவரும் விளம்பரம் செய்தார். கடையில் தினந்தோறும் கூட்டம் கூடியது. பல ஆண்டுகள் கடினமாக உழைத்தார். பழைய கடையை இடித்து பிரம்மாண்ட கடையாக மாற்றினார். கடனில் ஓடிய கடை இப்போது வடநாட்டவரின் உழைப்பால் பல மடங்கு லாபத்தில் இயங்க துவங்கியது. லலிதா ஜூவல்லரி தமிழத்தின் பிரபலமான நிறுவனமாக மாறியது. 

இந்த நிலையில் பழைய ஓனரின் உறவினர்கள் மூலமாக புது பிரச்சனை வந்தது. LALITHA JEWELLERY எனும் பெயர் எங்களுக்கு சொந்தமானது. அதை பயன்படுத்த கூடாது. நாங்கள் அதே பெயரில் கடை கடத்த போகிறோம் என்றார்கள். இதை கேட்டதும் அந்த வடநாட்டவர் துடித்துப்போனார். கையில் காசு பணம் நிறைய இருக்கு வேறு எங்கு கடையை மாற்றினாலும் கடை சிறப்பாக தான் நடக்கும் ஏனென்றால் அந்த பெரியவர் காலத்து லலிதா இல்லை இது. இது அந்த வடநாட்டான் உழைப்பால் வந்த புகழ்பெற்ற பிராண்டடு நேம் லலிதா. அந்த அளவிற்கு வடநாட்டவர் உழைப்பாள் லலிதா எனும் பெயர் புகழ்பெற்றது. அப்படிப்பட்ட பெயரை இழக்க விரும்பவில்லை ஏனென்றால் அது தான் அந்த வடநாட்டவரின் உழைப்பின் அடையாளம். காசு பணத்தை திருடினால் கூட கவலையில்லை ஆனால் ஒவரின் உழைப்பை திருடுவது பெரும் கொடுமை. 

ஆழ்ந்து யோசித்தார் அந்த வடநாட்டவர். நமது அடையாளத்தை இழக்க கூடாது. அதே நேரத்தில் சட்ட சிக்கலிலும் இல்லாமல் தனது லலிதா நிறுவனத்தை நடத்தவும் வேண்டும். 

அவர் எடுத்த முடிவு என்ன தெரியுமா? 
LALITHA எனும் பெயரை LALITHAA என மாற்றி விட்டார். 

தனது கடின உழைப்பை தொடர்ந்தார்.  இன்று தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல கிளைகளோடு பறந்து வளர்ந்தது.

அந்த வடநாட்டவர் தான் இன்றைய LALITHAA JEWELLERY நிறுவனர் கிரேன்குமார்.

No comments:

Post a Comment