வாழ்வின் பெரும்பாகத்தை, அவலப் பிழைப்பில் இலங்கையிலேயே கழித்த, இந்தியர்களுக்குக் கூட, இன்று பிரஜா உரிமை இலங்கை சர்க்காரால் மறுக்கப்படுகிறது என்றால், இன்று இலங்கை சர்க்கார் கொண்டுவந்திருக்கும், குடியேற்ற வெளியேற்ற மசோதாவால் பெரும்பாலான இந்தியர்களுக்கு (பல வருடங்கள் அங்கு வாழ்ந்தவர்களுக்குகூட) பிரஜா உரிமை இல்லாமல் போய்விடும்.
இலங்கை ரோடுகளில் பணம் குவிந்து கிடப்பது போலவும், அவைகளை இந்தியர்கள், மூட்டை மூட்டையாய் அள்ளிக் கட்டிக்கொண்டு வருவது போலவும் தோழர் ஜெயவர்த்தனா எண்ணிவிட்டாரேயொழிய, இந்தியர்கள் தங்கள் மனைவி மக்களைப் பிரிந்து, மனித ரூபம் எடுத்து மாடாய் உழைத்து அனுப்பும் இரத்தக் காசு என்பதை மறந்துவிட்டார் போலும்!. - #பசும்பொன்_தேவர்.
No comments:
Post a Comment