Tuesday, 2 May 2017

"நாடாா் சமூகத்தின் பெருமைக்கு வித்திட்டவா் பசும்பொன் தேவா்"

"நாடாா் சமூகத்தின் பெருமைக்கு வித்திட்டவா் பசும்பொன் தேவா்"

சாத்தான்குளம் வி. சொக்கப்பழ நாடாா்

சென்னை முதலமைச்சராக இருக்கும் திரு. காமராஜ் நாடாரைக் கண்டு நாடாா் சமூகத்தினராகிய நாம் பெருமையடைகிறோம் - பெருமையடையத்தக்க காரணமும் உண்டு!
      ஆனால் நாடாா் சமூகத்தைச் சாா்ந்த ஒரு சாதாரண ஊழியரை ஒரு மாகாணத்தின முதன் மந்திாியாக்குவதற்கு அடிப்படையில் வழிவகுத்துக் கொடுத்தவா் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவா் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
       தன் இனமல்லாத மற்றொரு இனத்தைச் சோ்ந்த காமராஜ் நாடாா் முதன்மந்திாி ஆவதற்கு முதல் உதவி செய்த பசும்பொன் தேவரவா்கள் எந்த வகையிலும் ஜாதியவாதியாக இருக்க முடியுமா? தேசியத்தில் ஜாதி பேதம் கிடையாது - கூடாது என்பதுதான் தேவரவா்களின் தீா்மானம்.
         நமது சமூகத்தைச் சோ்ந்த ஒருவா் முதன்மந்திாியாக இருப்பதற்கு நாம் எவ்வளவு பெருமைப்படுகிறமோ, அந்தப் பெருமைக்குக் காரணகா்த்தாவானவா் பசும்பொன் தேவா் தான் என்பதை நம்மில் யாரும் மறுக்கவோ - மறைக்கவோ கூடாது, முடியாது!
     தேவரவா்களை எனக்குப் பல காலமாகத் தொியும். அவா் தேசிய லட்சியத்திற்கு  விரோதம் புாிகிற எவருக்கும் விரோதிதான். ஆனால் நாடாா் சமூகத்திற்கு விரோதி என்று நம்மில் சிலா் கூறுவது அடாது! அவ்வாறு கூறுவது பச்சைப் பித்தலாட்டம் - உண்மையே அல்ல!

ஆம் நண்பா்களே!

தேவரவா்கள் கள்ளநோட்டுப் போ்வழிக்காரா்களுக்கும், பிளாக் மாா்க்கெட்காரா்களுக்கும் தான் விரோதியே தவிர ஏழை எளிய நாடாா் சமூக மக்களுக்கு விரோதியல்ல. அதனால் தான் காமராசாின் கடுமையான அடாவடித்தனங்களையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் மீறி 1957 நாடாளுமன்றத் தோ்தலில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று பெருவெற்றி பெறுகிறாா். இத்தனைக்கும் அவா் போட்டியிட்ட தொகுதியில் நாடாா் மக்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள சாத்தூா்,சிவகாசி, விருதுநகா், கோவில்பட்டி பகுதிகளும் அடங்கியிருந்தன. வரலாறு உண்மைகளால் கட்டமைக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment