1972 ல் சென்னையில் பசும்பொன் நுண்கலைக்கழகம் என்ற அமைப்பு அந்த ஆண்டு நவம்பரில் தேவர்ஜெயந்திவிழா நடத்தியது.
நடிகர்திலகம் சிவாஜிகணேசனையும்
அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் சட்டமன்றக்குழு தலைவர்
ஏ.ஆர்.பெருமாள் அவர்களையும் அழைத்திருந்தது.
ஏ.ஆர்.பெருமாள் அவர்கள் பேசும்போது தேவரவர்களின் சிறப்புகளை எல்லாம் குறிப்பிட்டதோடு
முதுகுளத்தூர் கலவரம்,
கீழத்தூவல்
கீரந்தை
சிறுவனூர்,
உழுத்திமடை
மழவராயனேந்தல்
போன்ற ஊர்களில் காமராஜ் போலீஸ்
நடத்திய கொடூரங்களைப்பட்டியலிட்டுப்பேசினார்.காமராஜ் அட்டூழியங்களும் பட்டியலிட்டார்.
அடுத்தப்பேசிய சிவாஜிகணேசன்
என்னை மேடையில் வைத்துக் கொண்டே காமராஜரை இழித்துப்பேசுவதா என்று கொந்தளித்தார்.
அனுமன் இதயத்தைப் பிளந்து பார்த்தால் ஸ்ரீராமர் தெரிவார்.
எனது இதயத்தைப்பிளந்துபார்தால்
காமராஜர் தெரிவார் என்று பேசியவுடன்
ஏ.ஆர்.பெருமாள் எழுந்து சிவாஜிகணேசனை மிக அசிங்கமாக,கொச்சையாகத் திட்டிவிட்டார். சிவாஜிகணேசனோ அதிர்ந்து,ஸ்தம்பித்து நின்றுவிட்டார்.
காமராஜைபுகழ்ந்து பேச முற்பட்ட சிவாஜிகணேசனை எதிர்த்து கூட்டத்தினர் "காமராஜின் கைக்கூலி சிவாஜி ஒழிக " என்று முழக்கமிட்டனர்.
சிவாஜிகணேசன் மேடையை விட்டு இறங்கிப்போய்விட்டார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இருதலைக் கொள்ளி எறும்பாயினர்.
சிலநாட்கள் கழித்து ஏ.ஆர்.பி.யையும்,சிவாஜியையும் சமாதானப்படுத்த முனைந்தனர்.
சிவாஜியின் அன்னை இல்லத்தில் அகில இந்திய ஃபார்வர்ட்பிளாக் தலைவர்களுக்கு தேனீர் விருந்து ஏற்பாடாயிற்று.
அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர்,எம்.பி.
ஏ.ஆர்.பெருமாள்.எம்எல்ஏ
சௌடி சுந்தரபாரதி எம்எல்ஏ
அழகுத்தேவர் எம்எல்ஏ
ரத்தினசாமித்தேவர் எம்எல்ஏ
கந்தசாமி எம்எல்ஏ
தவமணித்தேவர் எம்எல்ஏ
முத்தையா எம்எல்ஏ
சக்திமோகன் எம்எல்சி
ஆகிய அஇபாபி எம்எல்ஏக்களும் பசும்பொன் பைண்ஆர்ட்ஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
சிவாஜி தனது கடந்த கால நிகழ்வுகளையும் திமுக வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு காமராஜ் ஆதரவில் காங்கிரஸில் இணைந்திருப்பதை விளக்கினார். தேவருக்காக ஏதாவது செய்யவிரும்புகிறேன் சொல்லுங்கள் செய்கிறேன் என்றார்.
உசிலம்பட்டி எம்எல்ஏ கந்தசாமியின் விருப்பப்படி தேவரது முழு உருவ வெண்கலச்சிலையை சிவாஜி செய்துதருவதென்றும்
அதை உசிலம்பட்டி ஐந்துகல்ராந்தலில் அமைப்பது,அந்த இடத்தில் கந்தசாமி சிலைக்கான பீடம் அமைப்பது என்றும் சமாதான உடன்பாடாயிற்று.
அதை அப்படியே ஏற்று சிவாஜி தேவர்சிலையை ஆறுமாத கால இடைவெளியில் தயாரித்துவிட்டார்.
ஆனால் உசிலம்பட்டித் தொகுதி மக்கள் காமராஜ் தொண்டனான சிவாஜிகணேசன் தயாரித்துத்தருவது தேவரது சிலையே ஆனாலும் அதை ஏற்பதில்லை என்று ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட்டனர்.
பீடம் கட்டும் பணி துவங்கவே இல்லை.
சிவாஜிகணேசன் தயாரித்த தேவர்சிலை சிவாஜிபிலிம்ஸ் அலுவலகத்தில் தூங்கியது.
1975 அக்டோபர் 2 ல் காமராஜ் இறந்தபிறகு சிவாஜிகணேசன்
இந்திராகாங்கிரஸில் இணைந்தார்.
1976 ஜனவரி 31 ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி அமைந்தது.
சிவாஜியின் ஆலோசனைப்படி ஆப்பனூர் அர்ச்சுணத்தேவர் தேவர்சிலையை ஆப்பனூரில் அமைத்தார். சிவாஜிகணேசன் ஏற்பாட்டில் தமிழ்நாடு கவர்னர் மோகன்லால்சுகாதியா சிலையைத் திறந்துவைத்தார்.
No comments:
Post a Comment