Thursday, 15 May 2025

இராமநாதபுரம் மாவட்டத்தை தண்ணி இல்லா காடாக மாற்றிய படுபாதக திட்டம் தான் வைகை அணை திட்டம்.

சேதுபதிகள் ஆண்ட இராமநாதபுரத்தில் பாசன நீர் வழிச்சாலை அதிகம்.  இன்றும் தமிழ்நாட்டில் அதிகமான பெரிய கண்மாய்கள் கொண்டது. 150க்கும் மேற்பட்ட கண்மாய்கள் ஒவ்வொண்றும் 130ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்டது. அதுவும் RS.மங்களம் தமிழ்நாட்டில் உள்ள பெரிய கண்மாய்களில் ஒன்று. 
மேலும் அனைத்து கண்மாய்களும் ஒன்றுடன் ஒன்று கால்வாய் மூலம் சேதுபதி மன்னர்கள் காலத்தில் இணைத்திருக்கிறார்கள். அதனால் ஒரு கண்மாய் நிறைந்தால் உபரி நீர் கால்வாய் மூலம் அடுத்த கண்மாய்க்கு நீர் செல்லும்.

மேலும் ரெகுநாத காவிரி ஒற்றையே மன்னர் ரெகுநாதசேதுபதி உருவாக்கி வைத்திருக்கிறார். அப்படி அங்கு ஏராளம்.

அதனால் வைகை நீரை வீனாக்காமல் நேரடியாக இராமநாதபுரம் கண்மாய் ல் கலக்க செய்து அதிலுள்ள 48மடைகள் மூலம் பல திசைகளிலும் மற்ற கிராம கண்மாய்களும் தண்ணீர் விவசாயத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. விவசாயம் செழுமையாக இருந்தது அங்கே.

பண்டைய காலத்தில் தமிழகத்தையே உலுக்கிய தாது வருட பஞ்ச காலத்திலும் இராமநாதபுரம் செழிப்புடன் இருந்ததுள்ளது. 

வைகை நீர் தங்களது தேவைக்கு பற்றாமல் தான் மன்னர் ரிபெல் முத்துராமலிங்கசேதுபதி காலத்தில் கேராள திருவாங்கூர் சமஸ்தாத்துடன் ஒப்பந்தமிட்டு முல்லை பெரியாறு அணை எனும்  திட்டம் உருவாக்கப்பட்டது. 

பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி நிதி பங்களிப்புடன் முல்லை பெரியாறு அணை முழுமை பெற்றது. 

வைகை மற்றும் முல்லை பெரியாறு என முழு நீரையும் இராமநாதபுரம் பயன்படுத்தி வந்த நிலையில் 

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியில் 
இராமநாதபுரம் மாவட்டத்தையே தண்ணி இல்லா காடாக மாற்றிய திட்டம் தான் வைகை அணை திட்டம். அதுவரை வைகை மற்றும் முல்லைபெரியாறு தண்ணீருக்கு இராமநாதபுரம் பெரிய கண்மாய் தான் பிரதான அணையாக இருந்தது. 

இப்போது அது வைகை அணையில் தேக்கப்பட்டு தேனி திண்டுக்கல் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட தேவை போகவே இராமநாதபுரம் நீர் வருகிறது. ஏன் தண்ணீர் வருவதே இல்லை என கூறலாம். கூடுதல் மழை காலங்களில் மட்டும் தண்ணீர் வருகிறது.

அதுவும் கடந்த 60ஆண்டுகால திராவிட ஆட்சியில் கால்வாய் கண்மாய்கள் சரியாக பராமரிக்க படாமல் கண்மாய்களை நிரப்பாமலே கண்மாய்கள் வழியாக உடனடியாக கடல் நோக்கி நீர் வெளியேற்றப்பட்டு நதிப்பாலம் வழியாக ஆற்றாங்கரை எனும் இடம் உள்பட சில இடங்களில் கண்மாய்யில் கலக்கிறது.

No comments:

Post a Comment