Thursday, 15 May 2025
மதுரையை காத்த மாமன்னர் கிழவன் சேதுபதி வீரத்தை போற்றும் பூப்பல்லாக்கு விழா மண்டபம்
மைசூர் படை மதுரை மீது போர் தொடுத்து மதுரை படை வீரர்கள் மட்டுமல்லாது, கண்ணில் பட்ட பொதுமக்களின் மூக்கையும் மேல்உதட்டையும் அறுத்துக்கொண்டே முன்னேறினார்கள். அழிவின் பிடியில் மதுரை வந்த போது மதுரை மன்னர் தலைமறைவாயி தனது மனைவி மூலம் இராமநாதபுரம் மன்னர் கிழவன்சேதுபதிக்கு மதுரையை காப்பாற்றும்படி தகவல் அனுப்பினார்.
அந்த காலகட்டத்தில் மதுரை மன்னருக்கும், இராமநாதபுரம் மன்னருக்கும் இணக்கமான உறவு இல்லை என்றாலும் மதுரை பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு 40000படை வீரர்களுடன் இராமநாதபுரம் போர் படை மதுரை நோக்கி கிளம்பியது. மைசூர் படையை ஓட ஓட விரட்டியது சேதுபதி படை. மைசூர் வரை விரட்டி சென்று மைசூர் படைத் தளபதிகள் மற்றும் வீரர்களின் மூக்கை அறுத்து கொண்டு மூடையில் கட்டி மதுரை அரண்மனையில் கொட்டினார்.
அதனால் பெரிதும் மகிழ்ந்த மதுரை மன்னர் மைசூர் போல இனி இராமநாதபுரம் அரண்மனையிலும் தசரா விழா கோலகலமாக நடக்கவேண்டும் என தங்கத்தால் ஆன அம்மன் சிலை தந்து மேலும் திருமலை எனும் பட்டத்தையும் சூட்டினார்.
அந்த சிலை தான் இராமநாதபுரம் இராஜஇராஜேஸ்வரி அம்மனாக இன்றும் தரசா (நவராத்திரி) கொண்டாடப்படுகிறது.
மைசூர் போரை வென்றதின் காரணமாக இராமநாதபுரம் மன்னரை பெருமை சேர்க்கும் விதமாக மதுரை தமுக்கம் எதிரே இராமநாதபுரம் மகாராஜா கல்மண்டபம் கட்டப்பட்டது. அங்கே இராமநாதபுரம் மன்னர்களின் அனுமன் கொடியை நினைவுபடுத்தும் விதமாக அனுமன் கோவிலுடன் அமைக்கப்பட்டது.
மைசூர் போரில் வென்றதின் காரணமாக அமைந்த இந்த இராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மண்டபத்தை மைசூர் போர் மண்டபம், ,மூக்கறுப்பு போர் மண்டபம் எனவும் கூறுவர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment