Saturday, 21 September 2024
இராமநாதபுரம் ராஜா பிறவியிலேயே ராஜா. செட்டிநாடு ராஜா பிசினஸ் ராஜா - பசும்பொன் தேவர்
இராமநாதபுரம் ராஜா பிறவியிலேயே ராஜா.
செட்டிநாடு ராஜா பிசினஸ் ராஜா.
"உங்களுக்கு எத்தனை லட்சம் வேண்டுமென்றாலும் கொடுத்து விடுகிறோம். நீங்கள் தேவரை எதிர்த்து முதுகுளத்தூரில் போட்டிபோட வேண்டும். உங்களுக்கு மந்திரி பதவி கொடுத்து விடுகிறேன்.
அதற்கு இராமநாதபுரம் ராஜா, பிறப்பால் ராஜாவாக இருந்ததால் அவருக்கு எத்தனை லட்சம் கொடுக்கிறேன் என்று சொன்ன போதிலும், காமராஜ் யோசனைக்கு ஒத்துக் கொள்ளவில்லை.
செட்டிநாடு ராஜா, பிசினஸ் ராஜாவாக இருந்ததால், “உனக்கு இவ்வளவு கொடுக்கிறேன். நீ என்ன கொடுக்கிறாய்?" என்று பேரம் பேசி, "எனக்கு ஒரு ஸ்தானம். என் தம்பி ராமனாதன் செட்டியாருக்கு ஒரு ஸ்தானம். நீங்கள் முதன் மந்திரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்துவிட்டால், "சிதம்பரத்துக்கு ஒரு எம்.எல்.சி. ஸ்தானம்" என்று காமராஜருடன் காண்டராக்ட் பேசுகிறார் முத்தையாச் செட்டியார்." - #பசும்பொன்_தேவர்
21.2.1957 ல். தமது வேட்பாளர் என்.ஜி.சக்ரவர்த்திநாயக்கர் அவர்களை ஆதரித்து காஞ்சிபுரத்தில் பசும்பொன் தேவர் ஆற்றிய உரையிலிருந்து.
நூல்: பொக்கிஷம் - 382
முகநூல் பதிவு : Sadaiyandi Puregold Sms
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment