Friday, 6 March 2026
நாராயண காவிரி கால்வாய் அர்ப்பணிப்பு விழா புகைப்படங்கள்
கடந்த 50ஆண்டுகால இராமநாடு வரலாற்றில் ஆகச் சிறந்த விழா இது தான்.
நாராயண காவிரி கால்வாய் அர்ப்பணிப்பு விழா.
மார்டின் குழுமம் மார்டின் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லீமா ரோஸ் மார்டின் மற்றும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சார்பில் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திலும் 54 கி.மீ நீளமுள்ள நாராயணன் காவிரி கால்வாய் ரூ.50 லட்சம் செலவில் முழுமையாக சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும் விழா கமுதி தாலுகா பசும்பொன்னில் அமைந்துள்ள மார்னிங் ஸ்டார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் ராஜா நாகேந்திர சேதுபதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
மெகா அறக்கட்டளையின் நிறுவனர் நிமல் ராகவன் அவர்ளின் கடின முயற்சியில் இத்திட்டம் முழுமைபெற்றது. இத்திட்டத்தின் மூலம் 5 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்.
இந்நிகழ்ச்சியில் மார்டின் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர், லீமா ரோஸ் மார்டின், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், மெகா அறக்கட்டளையின் நிறுவனர் நிமல் ராகவன் ஆகியோர் திட்டம் குறிந்த அனுபவங்களையும் அடுத்தடுத்த சேவைகள் குறித்தும் விளக்கி பேசினார்கள். மேலும் ஏபிஜே அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளையின் “கலாம் வீடு” இணை நிறுவனர் ஷேக் சலீம், ராமநாதபுரம் மாவட்ட விவசாய சங்க செயலாளர் முத்துராமலிங்கம், நடிகர் மற்றும் ஏ.எம்.டி அறக்கட்டளை சார்பில் அருண்மொழி தேவன், பரிதி நலம் அறக்கட்டளை நிறுவனர், மார்னிங் ஸ்டார் கல்லூரி சார்பில் அல்போன்ஸ் பாத்திமா மற்றும் மகளிர் கல்லூரி முதல்வர் அமளி ஆரோக்கிய செல்வி, நெருப்புத் தமிழர் நெல்லை ஜீவா, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் மற்றும் இயற்கை விவசாயி ராமர் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)




















































































































































































































































































































































No comments:
Post a Comment