Sunday, 9 March 2025

பசும்பொன் தேவரை பிரதமர் நேருவால் கூட ஜெயிக்க முடியாது. - வி.கே.ஜான்

-  01/11/1957 
திரு முத்துராமலிங்கத் தேவர் என்னுடைய நண்பர் இல்லை .ஆனால் அவரை தெரிந்து வைத்துள்ளேன்.மிகப் பரந்த நிலப்பரப்பில் வாழும் மக்களால் மிக அதிக அளவில் விரும்பப்படக்கூடிய மனிதர் அவர். குறிப்பாக பாராளுமன்ற தொகுதியில். 
நான் இங்கு ஒரு சவால் விடுகிறேன். இந்த காங்கிரஸ் அரசின் எந்த அமைச்சராக இருந்தாலும் , எந்த ஒரு சபை உறுப்பினராக இருந்தாலும், அல்லது ஒட்டுமொத்த இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்த சபை உறுப்பினர்களாக இருந்தாலும் ஏன் இந்திய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களே கூட நேரடியாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போட்டியிடும் சட்டமன்ற தொகுதியிலோ பார்லிமென்ட் தொகுதியிலோ அவரை எதிர்த்து நின்றால் தோல்வியைத் தழுவுவார்கள். அவரை எக்காலத்திலும் யாராலும் வெற்றி கொள்ள இயலாது. எப்பொழுதும் முத்துராமலிங்கத் தேவர் தான் வெற்றி பெறுவார்‌. அவர் அதிகப்படியான மக்களால் விரும்பப்படுகிறார். அவர் பிரபலமான மனிதர்.

திரு .வி .கே .ஜான். 
உறுப்பினர் மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவை.

ஆவணத் தகவல்
கமுதி.வே .மாயகிருஷ்ணன்.
ஆப்பநாடு  வரலாற்று ஆய்வு குழு.

No comments:

Post a Comment