Monday, 11 September 2017

தேவரைய்யா அரசியல் மொழிகள்

அரசியலின் மோசடிகளை மிகக் கடுமையாக எதிர்த்துள்ளார் தேவர்.  அவற்றில் சில வரிகள் உங்களுக்காக.

தான் வாழ பதவி தேவை என்று கருதுபவர்களிடம் உண்மைக்கு புறம்பானவற்றை தான் எதிர்பார்க்க முடியும்.-ஸ்ரீதேவர்

நான் பேசுவது, எழுதுவது, சிந்திப்பது, சேவை செய்வது எல்லாமே தேசத்திற்காகவே , எனக்காக அல்ல.-ஸ்ரீதேவர்

நான் எவரையும் எதிரியாக கருதுபவன் அல்ல தவறுகளை கண்டிக்கின்ற என்னை யாரேனும் எதிரியாக பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.-ஸ்ரீதேவர்

சொந்த செலவிட்டு ஓட்டு போடுங்கள் அதுதான் நல்ல மக்களுக்கு அடையாளம்.-ஸ்ரீதேவர்

ஒரு மூளி இந்தியாவையும், போலி சுதந்திரத்தையும் வெள்ளைக்காரன் கொடுத்தான்,  காங்கிரஸ்காரர்கள் அதனை வாங்கிக்கொண்டார்கள்.-ஸ்ரீதேவர்

நமது நாட்டிற்கு கிடைத்திருக்கும் சுதந்திரம் "நிறத்தில் "மட்டும் தான் தங்கம் போன்றது "தரத்தில் "அல்ல-ஸ்ரீதேவர்

அதிகாரம் மக்களுடையது, அது நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருகிறது. நாம்  ஜாக்கிரதையாகப் பாதுகாக்க வேண்டும் என்ற தூய மனோபாவம் மந்திரிகளுக்கு இருக்க வேண்டும். -ஸ்ரீதேவர்

மந்திரி பதவி என்றால் அதன் பொறுப்பைச் சுமக்க "நாணயம் "வேண்டும்.  நல்ல "நெறி" வேண்டும்.-ஸ்ரீதேவர்

பதவியை ஒரு சேவையாக கருதுபவர்களிடம் ஆட்சி இல்லாமல் போனால்,  மக்களுக்கு  நலன் என்பது வெறும் கனவு தான் .-ஸ்ரீதேவர்

பக்குவப்பட்ட ஒருவன் இந்து கோவிலில் காட்டுகின்ற தீப வெளிச்சத்தையும், கிருத்தவ வளாகத்தில் வைக்கின்ற மெழுகுவர்த்தி ஒளியையும், முகமதியர் ஊதுபத்தியில் காணுகின்ற சுடரையும் தன் சரீரத்தின் இருட்டை போக்க எழுப்பவேண்டிய ஞானவிளக்கின் சொருபமாக காண்பான்.-ஸ்ரீதேவர்

ஒருவர் உதவியின்றி ஒருவர் வாழ முடியாது" என்ற நடைமுறை உண்மையை எல்லாரும் உணர்ந்தால் உலகில் பஞ்சமும்,பற்றாக்குறையும்,பகையும் வரவே வராது.
#தேவர்

ஒரு நாட்டின் எதிர்காலம் மக்களின் சுகநிலையைப் பொறுத்த தாகும்.
மக்களுக்கு நோயற்ற வாழ்வளிப்பதில் முதன்மை காட்ட வேண்டும் அரசாங்கம்.
#தேவர்.

அறிவு என்பது அறியாமையை அளந்து காட்டும் கருவியே!

#தேவர்

பிறர்க்கு இன்னல் விளைவிக்க முயல்பவர்கள் ஆண்டவனாலும் காப்பாற்றப்பட மாட்டார்கள் .
காப்பாற்றப்பட்டது கிடையாது .

தேவர்.

தேசியத்திக்குக் கேடு புரிகிறவர்களை கண்டிப்பேன்.
அதில் நான் எந்த காலத்திலும் பின்படமாட்டேன்.

தேவர்.

அதிகாரம் உங்களிடம் இருந்தால் தப்புச் செய்யக் கூடாது .
அதிகாரத்தை வைத்து தப்பு செய்தவன் முன்னுக்கு வந்ததும்,வருவதும் கிடையாது .

தேவர்.

ஒழுக்கத்திற்கென வைத்த கட்டுப்பாடுகள் வயிற்றுப் பிழைப்பிற்கென கைவிடப்பட்டன. அதிகம் பணம் திரட்டும் ஆசையில் ஒழுக்கம் அழிந்துவிட்டது.

தேவர்

பணத்தைப் பெற்று நல்ல குணத்தை இழந்து விடாதே!  குணத்தைப் பெற்று நல்ல மனத்துடன் வாழ்வதே மானுட வாழ்க்கையின் ஆக்கமான நோக்கமாகும்.

தேவர்.

மலர் மாலைக்கு நீட்டும் கழுத்தை தூக்கு கயிருக்கும் நீட்டுபவனே தலைவன் - ஸ்ரீபசும்பொன் தேவர்

மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்
கங்கையே சூதகமானால்? 
மக்கள் தவறு செய்தால் அரசு கண்டிக்கலாம் அரசே தவறு செய்தால் எங்கே போவது?

தேவர்

பதவி ஆசை பிடித்தவனுக்கு அவனுடைய கை கால்களுமே எதிரியாகும்.

தேவர்

தனியாக இருக்கும் போது சிந்தனையிலும், கூட்டத்தோடு இருக்கும் போது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும்.

தேவர்

********************************

No comments:

Post a Comment