Thursday, 5 March 2026

சேதுபதி சீமையில் விளைந்த நெல் ரகங்கள் ( இராமநாதபுரம்)

சேது மன்னர்களது அக்கரையினால் சேதுநாட்டின் வேளாண்மைத் தொழில் சிறந்து இருந்தது என்பதை அறிய முடிகிறது. இராமநாதபுரம் சமஸ்தான மெனியூவலின்படி வறட்சியும், பற்றாக்குறையும், சேது நாட்டுக் குடிமக்களை வாட்டி வந்த அந்தக் காலத்தில் அவர்கள் மிகச் சிறப்பாக வேளாண் தொழிலில் ஈடுபட்டு இருந்தனர் என்பதை அறிய வியப்பாக உள்ளது. ஏனெனில் சாதாரணமாக விளையக்கூடிய நெல் ரகங்களான உய்யக் கொண்டான், உருண்டைக் கார், போன்ற வகைகளுடன் மிகச்சிறந்த சம்பா நெல் ரகங்களும், சேதுபதி சீமையில் உற்பத்தி செய்யப்பட்டன என்பதைக் கீழே கண்ட பட்டியலின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
சேதுபதி சீமையில் விளைந்த நெல் ரகங்கள்
1 . சம்பா

2 . சரபுலி சம்பா

3 . ஈர்க்கி சம்பா

4 . கெருடம் சம்பா

5 . சிறுமணியன்

6 . வரகுசம்பா 

7. வெள்ளகோடி

8. தில்லைநாயகம்

9. வெள்ளை மிலகி

10. பாலுக்கினியம்

11. கவுனிசம்பா

12. கொம்பன் சம்பா

13. சிரகி சம்பா

14. மாப்பிள்ளை சம்பா

15. கல்மணவாரி

16. மானாவாரி

17. வெள்ளை மானாவாரி

நாட்டு நெல்

18. பணமுகாரி

19. முருங்கன்

20. நரியன்

21. வெள்ளைக் குருவை - வருடம் முழுவதும்

22. கருப்புக் குருவை -

23. மொட்டைக் குருவை -

24. செங்கனிக் குருவை -

போன்ற நெல் வகைகள் விளைந்துள்ளன.

தகவல்கள்
1 - T-Manual of Ramnad Samasthanam (1891) pg 236
 
2 - T - Manual of Ramnad Samasthanam (1891) Page 48