Friday, 19 May 2023

மண்டபம் களஞ்சியம் கோவில்

அன்ன சத்திரங்களை உண்டாக்கி, அதில் தங்கு தங்குதடையின்று மக்கள் பசியாற நெற்களஞ்சியம் ஏற்படுத்தி, அவைகளை பாதுகாக்க பிரம்மச்சாரி இளைஞர்களை காவலுக்கு அமர்த்திய சேதுபதி மன்னர்கள். 
வரலாறு ரொம்ப பெருசு.
விரிவாக காண 
Thevar media News முகநூல் & யூடிப் பக்கத்தில் பாருங்க.

Thursday, 18 May 2023

முல்லைப்பெரியாறு அணைக்கு வித்திட்டவர் சேதுபதி மன்னர்

சேதுபதி நாட்டில் கடுமையான வறட்சியை நிரத்தரமாக போக்க மன்னர் சேதுபதி முடிவு செய்தார். 1792 ல் தனது அமைச்சரைவையை கூட்டி கேரளா திருவிதாங்கூர் சமஸ்தானம் பகுதி மலைகளில் முல்லை ஆறு, பெரியாறு என இரண்டு ஆறுகள் வீணாக கடலில் கலந்து வருகிறது. அதை தடுத்து நிறுத்தி வைகையோடு இணைத்து நம் சீமைக்கு நீரை கொண்டு வரவேண்டும். அதற்கான சாத்தியகூறுகளை முதலில் ஆராய வேண்டும் என மன்னர் ஆனையிட்டார். அதன்படி அமைச்சரவையில் சிறந்த 12நபர்களை தேர்வு செய்து அந்த குழுவுக்கு தலைமையாக முத்துயிருளப்ப பிள்ளையை நியமித்து அனுப்பினார். அந்த குழு முல்லை மற்றும் பெரியாறு காட்டுபகுதியில் தங்கி ஆய்வு செய்தனர். நீர் ஓடும் பகுதிகளில் எலுமிச்சை பழ மூட்டைகளை கொட்டி சோதனை செய்தனர். ஓடிடும் நீரில் கொட்டிய எலுமிச்சம் பழங்கள் நிலையாக எங்கு போய் நிற்கிறது என பின்னால் ஓடியே கண்டு பிடித்தனர். 

எலுமிச்சம் பழங்கள் நிலையாக நிற்கும் பகுதியே முல்லை மற்றும் பெரியாறு என இரண்டு ஆறுகளை இணைத்து தமிழகத்திற்கு தண்ணீரை திருப்பும் வகையில் அணை கட்ட சரியான இடம் என தற்போது முல்லைப்பெரியாறு அணை இருக்கும் இடத்தை உறுதி செய்தனர். அதை நாடு திருப்பி தங்களின் சேதுபதி மன்னரிடம் தகவல் கொடுத்தனர். 

அதன்படி திருவிதாங்கூர் மன்னரிடம் சேதுபதி மன்னர் அணைகட்ட விருப்பம் தெரிவித்து ஒப்பத்தம் செய்தார். அதன் பிறகு தனது அமைச்சர் முத்து இருளப்பபிள்ளையிடம் அணைக்கு தேவையான திட்ட மதிப்பிடு செய்து  பணிகளை தொடங்கிய போது அணை கட்ட தேவையான நிதி மிக அதிகமாக இருக்கிறது. இதனால் நிதிநெருக்கடியாகும் என்பதால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 

மீண்டும் மீண்டும் பல பல முறை முயற்சி செய்தும் முடியாத நிலையில் இறுதியாக ஆங்கில அரசு பென்னிகுயிக் எனும் பொறியாளரை வைத்து கட்டிமுடித்தது. 

இன்றும் அந்த அணை 5மாவட்ட மக்களுக்கு உதவி வருகிறது. முல்லைப்பெரியாறு அணைக்கு வித்திட்டவர் நம் சேதுபதி மன்னர். அதை நேரடியாக காட்டுக்கே சென்று சாத்தியகூறுகளை ஆராய்ந்து பணிகளை துவங்கும் வரையிலிலான திட்ட மதிப்பீடு செய்தவர் நமது இராமநாதபுரம் சேதுபதி மன்னரின் அறிவார்ந்த அமைச்சர் முத்து இருளப்பபிள்ளை அவர்களின் சமாதியை இன்று நேரில் போய் பார்த்தேன்.

சமாதி இராமநாதபுரம் அரண்மனை இடதுபுரம் உள்ள நீலகண்டி ஊரணி கரையில் உள்ளது.

Monday, 15 May 2023

இராமநாதபுரம் சேதுபதி மன்னர்

படிதழைக்க மனுநீதிப்‌ பயிர்‌ தழைக்க 
உயிர்‌ தழைக்கப்‌ பரவிவாமும்‌ 
குடி தழைக்கக்‌ கற்றோர்‌ தம்‌ குலந்தழைக்க நலந்தழைக்கக்‌ கோதிலாநின்‌ முடிதழைக்கச்‌ செய்ததனிக்‌ கடவுட்கென்‌ 
கைம்மாறு முற்றுந்தேரேன்‌ வடிதழைக்கும்‌ வேற்கை முத்து ராமலிங்க சேதுபதி மன்னரேறே. 

நினக்குமுடி கிடைத்தபடி முத்துவீ ரப்பகவி நிபுணன்‌ என்னே 
தனக்கு முடி கிடைத்தமகிழ்‌ வெனக்கடிதம்‌ 
எனக்குவரை தந்தான்‌ கண்டேன்‌ 
எனக்குமுடி கிடைத்ததெனக்‌ கிடைத்தபெரு 
மகிழ்ச்சியினுக்‌ கெல்லையில்லை 
சினக்குமுடி யரசரிக லடக்குமுத்து ராமலிங்க சேதுவேந்தே. 
  
எனதுகுலஞ்‌ செய்ததவப்‌ பேறென்கோ 
யான்‌ செய்தவ மென்காஞான 
தினகரன்பொன்‌ ஸனுச்சாமி செய்ததவப்‌ 
பயனென்கோ செகமேற்செய்த 
புனிதமிகு தவமென்கோ நீ மெளலி 
புனைந்தரசு புரியப்‌ பெற்ற தனகனடி பரவுழுத்து ராமலிங்க 
சேதுபதி யரசரேறே.
 
அதனிச்செய்யுட்‌ சிந்தாமணி, பக்‌-348.